பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

215


விளைவிப்பதும் உய்த்துணரத்தக்கது. அமிழ்தம் உண்டால் மகிழலாம். நீடு வாழலாம்; அதுபோல மழை வாழ்விக்கும். ஆயினும் மழை பெய்யும்பொழுது, காத்திருந்து ஏற்று வாங்கிக்கொண்டு முழுதும் பயன்படுத்துவோருக்கே மழை வாழ்வளிக்கும். அதுபோல இறைவனின் தண்ணருள் பொழியும். ஆயினும் தண்ணருளை அனுபவித்து இன்புற உயிர்கள் இறைவன் திருவடிகளைத் தொழுதலும், புகழ்தலும், விரும்பிச்சேர்தலும் அவன் நெறியாகிய அருள்நெறி நிற்றலும் அவசியம் என்பதை உணர்த்த வான்மழையை எடுத்துக்காட்டாகக் கொண்டார்.

உயிர்கள் வாழ்வில் பயிலுதல் உய்தற் பொருட்டேயாம். வாழ்வியலுக்கு நுகரும் பொருள்கள் தேவை. அவையின்றி உலகியல் இல்லை. உலகியல் செழுமையாக இல்லையானால் உயிர்கள் ஒழுக்க நெறிகளைச் சார்ந்து வாழ முடியாது. ஒழுங்கு, ஒழுகு, ஒழுகுதல், ஒழுக்கம் என்ற சொல் வளர்ச்சி கருதற்பாலது. இரண்டு கரைகளைத் தொட்டுக்கொண்டு, ஆனால் தொடும் கரைகளைச் சேதப்படுத்தாமல் செவ்விய தாக இடையறாது விழும் வீழ்ச்சியை நீர்வீழ்ச்சி என்கின் றோம். அதுபோல வாழ்வியல் மனிதர்கள் உலகத்தோடு ஒட்டி ஒழுகி உலகத்திற்கு இடையூறு செய்யாமல் நலம் விளைத்தலும்-நலம் பெறுதலும் ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கம் உலகியலில் நிலைபெற வேண்டுமாயின் பொருள் வளம் செழித்திருந்தால்தான் முடியும். வறுமை நிறைந்த வாழ்க்கையில் மனித உலகம் ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்தல் அருமையிலும் அருமையேயாம். வானினின்று மழை, மழையின் பயனால் மண் மேல் வளம். வளத்தின் பயனாக ஒழுக்கத்திற் சிறந்த வாழ்க்கை என்றே திருவள்ளுவர் நம்புகிறார். இதனை,

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு

என்றார். நீர் என்பதை நீர்மையென்று விரித்தும் பொருள் கொள்ளலாம். நீர்மையென்றாலும் ஒழுக்கமென்று பொரு-