பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ளாகும் உலகத்திற்கு ஒழுக்கம் இன்றியமையாதது. உலகு ஒழுக்கத்தால் உண்டு. இதனை "உண்டாலம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது. ஆதலால் உலகு ஒழுக்கத்தால் நடைபெறும். ஒழுக்கம் வான்மழையால் தோன்றும் என்பதறிக.

கடவுளை, ஒழுக்கத்தைத் தாமே உய்த்துணர்வோர் மிகச் சிலரேயாம். தாமே உணர முடியாதவர்களை அவ்வழியிற் செலுத்துவோர் அந்தணர். அந்தணர் என்போர் குலத்தினாலோ, கோலத்தினாலோ, ஒதும் வேதங்களினாலோ, எண்ணும் மந்திரத்தினாலோ அல்லர். கொண்டொழுகும் செந்தண்மையினாலேயாவர். செந்தண்மை எப்பொழுது தோன்றும்? பொறிகளை அவித்த பிறகே தோன்றும். நெல்லை அவித்தால் நுகர்தற்குச் சற்றே தகுதி பெற்ற அரிசியாகிறது. அரிசியை மீண்டும் அவித்தால் நுகர்தற்கு மிகுதியும் தகுதியாகிற சோறாகிறது. சோற்றோடு சுவை சேர்ந்தால் முழுதும் நுகர்தற்குத் தகுதியாகிறது. அதுபோல "பொறிவாயில் ஐந்தவித்தல்" முதல் வேக்காடு. புலன்களை அவித்தல் இரண்டாம் வேக்காடு. இங்ஙனம் பக்குவம் பெறும் உயிர்கள் திருவருளின்பத்தோடு கூடும் போது அந்தண்மை பெறுகின்றன. அவர்களே வாழ்ந்த வர்கள் வாழ்பவர்கள். மற்றவர்களெல்லாரும் வாழாது வாழ்வோரே. இங்ஙணம் வாழ்பவர்கள் கடவுளை, அவர்தம் அருளின் மாட்சியை, வாழ்க்கையின் சிறப்பை உலகினர்க்குப் பொதுவாக அறிவுரைகள் மூலமும்-சிறப்பாகத் தம் வாழ்க்கையின் மூலமும் காட்டுபவர்கள். பொறிகளையும் புலன்களையும் அழிப்பது வாழ்க்கையின் தத்துவம் அல்ல. அவற்றின் இயல்பு துய்த்தலும் நுகர்தலுமாகும். அவற்றின் இயல்புக்கு மாறாகச் செலுத்த வேண்டுமென்ற அவசியமுமில்லை! உயிர்கள் தீயதைத் துய்த்துத் தீமை விளைவித்துக் கொள்ளாமல் நல்லதைத் துய்த்து நலம்பெறட்டும் என்பதே இறைவன் திருவுள்ளம். நலத்திலும்கூட குறைநிறை கலந்த