பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோன்றுவது அன்று. யான் எனது என்பனவற்றின் மரணத்தில் தோன்றுவது. இத்தகு அறமே இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் எழுமையிலும் வாழ்விக்கும். அறம் எம்பெருமானின் இருப்பிடம்; பரமசிவத்தின் ஊர்தி எருது. பரமசிவம் உயர்த்திப் பிடிக்கும் கொள்கைக் கொடி எருதுக் கொடி; பரமசிவம் எழுந்தருளியுள்ள திருக்கோயிலின் முன்றுறைக் காவல் எருதேயாகும்.

எம்பெருமானுக்கும் எருதுக்கும் என்ன இயைபு? எருது உழைப்பின் சின்னம்! பற்றற்ற உழைப்பின் வடிவு! தருமையும் சுமலையும் விரிதமிழ்க் கூடலும் திருநகராக அரசு வீற்றிருந்து அருளும் குருஞான சம்பந்தர் "எருதுக்குத் தனதிச்சை உண்டோ" என்றார். அறத்தின் சின்னமே எருது என்று திருமுறை. பேசுகிறது.

எருதின் உழைப்பு ஓயாத உழைப்பு; பற்றற்ற உழைப்பு; உழைப்பின் பயன் உலகத்திற்கே! தான் துய்க்கும் சிலவாகிய வைக்கோலும் உலகோரால் உண்ண முடியாதது. அதனைத் தின்பதும் தன்னல நாட்டமின்றி மீண்டும் உழைத்துக் கொடுப்பதற்கு வலிமை கருதியேயாம். இத்தகு வாழ்க்கை யியல்புடையோர் நெஞ்சத்தில், இறைவன் எழுந்தருளியிருப்பான் என்பதே தத்துவம்; இதுவே அறநெறி.

அறத்தின் விளைநிலம் மனமேயாம். ஓங்கி உயர்ந்த கோயில் மதிற்கவர்களில் செடிகள் முளைக்கின்றன. அதனை வெட்டி அப்புறப்படுத்துதல் சிறந்த திருத்தொண்டு என்று திருநாவுக்கரசர் செய்து காட்டினார். இன்று சிலர் இதனைச் செய்கின்றனர். பலர் செய்வதில்லை. செய்யும் சிலரும் முறையாகச் செய்வதில்லை. மதிற்கூவரில் முளைத்திருக்கும் செடியை மேலாக வெட்டிவிடுவர். கட்புலனுக்குச் செடிகள் தெரியா. ஆயினும் மதிற்கவரின் இடுக்குகளில் உள்ள வேர் முன்னிலும் ஊக்கமாக உருத்துப் பருத்து வளரும். அதுபோல