பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விழுந்தது! அதனால் எல்லா உயிர்களிடத்தும் இறைவன் தங்கியிருக்கிறான் என்பது போந்த உண்மையன்றோ!

இந்த உலகில் இலர் பலராக இருக்கின்றனர். அதாவது பலர் ஏழையராக இருக்கின்றனர். உளர் சிலரேயாம். இக் கொடுமை ஏன், என்று திருக்குறள் ஆராய்கிறது. ஆராய்ந்து முடிவும் சொல்கிறது. தனக்கென முயலாவது, பிறருக்கென முயலுநர் இருப்பதால் உலகம் நிலைபெற்று நடந்து கொண்டிருக்கிறது என்று புறநானூறு கூறுகிறது.

இல்லென்று இரப்போர்க்கு இயைவது கரத்தல்
வல்லா நெஞ்சம் நம்மினும் பொருளே
காதலர் காத்தல்

என்று அகநானூறு கூறுகிறது. தவம் செய்பவர்கள் இறைவனின் தண்ணருளை வாங்கித் தருபவர்கள் எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுபவர்கள், மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகுபவர்கள், அகத்தே ஒத்த உரிமையுணர்வு உடையவர்கள். இத்தகு நலமுடையோர் பெருகினால், இலர் சிலராவர். உளர் பலராவர். இதனை,

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

என்ற திருக்குறளால் அறியலாம். இந்தக் குறளுக்கு வேறு வகையாலும் பொருள் கருதி மகிழலாம். அதாவது தவம் செய்தல் செல்வம்.

செல்வ நெடுமாடத் தில்லைநகர் மன்னும்
செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்

என்று திருஞானசம்பந்தர் ஒதுகின்றார். வறுமை என்பது, செல்வம் இன்மையன்று. எவ்வளவு இருப்பினும் "போதாது, போதாது” என்று மேலும் தேடுபவர்கள் உண்டு. அவர்களும்