பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கள்வர் வாழ்தலும் அரிது. களவினின்றும் ஒதுங்கியவர்கள், தவம் செய்து பெறக்கூடிய புத்தேளுலகத்தையும் பெறுவர் என்று திருக்குறள் தெளிவுபடுத்துகிறது.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

என்பது குறள்.

மனிதர்கள் தனிநிலையில் குற்றங்களின் நீங்கி நலம் பெற்று இன்புறுதலுக்கு வாய்மையிற் சிறந்த ஒழுக்கம் இல்லை. தனி மனிதனை மனித சமுதாயத்தோடு இணைத்து எவ்வித இடையீடுமின்றி இன்ப நலம் செழிக்கப் பிணைத்து வைக்கும் பெருநெறி வாய்மை நெறியாகும். இன்றைய உலகியலில் "உண்மை”, “சத்தியம்” என்ற பெயர்களில் நிலவும் ஒழுக்கக் கருத்துகளைவிட எல்லாவகையாலும் சிறந்த கருத்துடையது "வாய்மை” என்பது. இதுவே வள்ளுவர் கூறும் ஒழுக்கமாகும். தீமை பயவாத சொல்லே வாய்மை என்பது திருக்குறள் முடிவு. இக்கருத்தினைத் திருவள்ளுவர் வலிமையாகவே அறிவுறுத்துகிறார். உண்மை என்பதே சரியானது என்போருக்கு விளக்கம் சொல்வதுபோல,

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

என்று கூறுகிறார்.

எனவே, யாருக்கும் - யாதொன்றுக்கும்.எந்தக் காலத்திலும் எந்த வகையிலும் எந்த அளவிலும் தீமை பயவாத சொற்களே வாய்மையிற் சிறந்த சொற்கள் என்பதனை உணர்த்த "யாதொன்றும் தீமை இலாத சொலல்" என்று கூறுகின்றார்.

எனவே சொற்கள்வாய்மையுடையனவா அல்லனவா என்பதனை ஆராய்வதற்கு அவர் சொற்களுக்குரிய கருத்துகள் அல்லது செய்திகள் நிகழ்ந்தவையா? நிகழாதவையா