பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

257


திருவடி-உயிர்க்குக் கிடைக்கவில்லையா? என்று திருவள்ளுவர் இரங்குகின்றார்.

புக்கில் அமைந்தின்று கொல்லோ? உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு

என்பது குறள். இறைவன் திருவடியாகிய இன்பம் ஒன்றே உயிர்க்கு நிலையான இன்பம்; வாழ்வற வாழ்விக்கும் இன்பம், ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்ப அன்பும் இதுவேயாம் என்பதே திருக்குறள் முடிவு.

ஊழ்

வாழ்க்கைப் பண்ணையில் உயிர்கள் பக்குவப்படுத்தப் பெறுகின்றன. திருவள்ளுவர் உலகத்தின் முதலாகவும், பயனாகவும் சாட்சியாகவும் இருப்பவற்றைப் பாயிரத்தில் ஓதுகிறார். பின் மனிதன் மனையிலும், மனையின் நீங்கிய துறவிலும் செய்யும் கடமைகளை விரித்து ஓதிய திருவள்ளுவர், அச்செயல்களின் பயனாகிய ஊழை ஓரியலாக ஓதுகிறார்.

ஊழைத் தொடர்ந்து பொருட்டால் வருகிறது. அறத்துப்பாலில் பயின்ற வினைகளே ஊழாகவிளைந்து பொருட்பாலில் பயன் தருகிறது. பொருட்பாலில் திருவள்ளுவர், ஊழின் பயனாக விளையும் உலகத்தையும், அவற்றை வெற்றிகொள்ளும் வழியையும்- வழி வகைகளை யுமே பேசுகிறார். அறத்துப் பாலில், ஊழுக்குக் காரணமாக அமையும் ஒழுக்கங்களைப் பேசுகிறார்.

உயிர், பொறி புலன்களால் செய்யும் செயல், செயல்களின் விளைவாகிய ஊழ்; அவரவர் செயலின் பயனை ஊழை அனுபவிக்க வேண்டுமென்ற நியதி, எல்லாவற்றையும்

தி.II.17