பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஊழிற் பெருவவி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

என்றார். அப்படியானால் ஊழினை வெற்றி பெறமுடியாதா, என்ற வினா எழும். ஊழினை வெற்றி பெற முடியும். வாழ்க்கையின் நோக்கமே ஊழினை வெற்றி பெறுவதுதானே!

ஊழினை வெற்றி பெறுவதற்காகச் சூழ்ந்து செய்யும் வினைகள் மீண்டும் மீண்டும் ஊழாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அது எப்படி? ஊழினை அடக்குவேன்; ஒடுக்குவேன்; துன்பத்தை வெற்றி பெற்று இன்பங் கொள்வேன் என்று கருதி முயன்றால், ஊழ் மீண்டும் வலிமை பெற்றுத் தொடர்கிறது. அங்ஙனம் அல்லாமல் "இது என்னுடைய கடமை செய்கிறேன்; இதனால் ஆம் பயன்கள் பற்றிக் கவலையில்லை; பயன்கள் வந்தாலும் அவை எனக்குச் சொந்தமல்ல" என்று செய்தால், ஊழ் கழிகின்ற அளவில் நின்று கொள்கிறது; தொடர்வதில்லை. சிந்தனைப் போக்குகளாலும், மற்றும் நம்மைச் சூழ்ந்திருக்கும் சூழல்களாலும் முன்னமே அமைந்துள்ள ஊழின் வலியினை அறிந்து கொண்டு, அதனை மாற்றக்கூடிய அளவுக்குக் கடமைகளின் பரிணாமம் அமையவேண்டும். நெருப்பைத் தண்ணீர் அணைக்கும். உண்மையே!

ஆனாலும், நெருப்பினுடைய அளவும் ஊற்றப்பெறும் தண்ணீரின் அளவும் இயைபாக இருக்கவேண்டும். எரிகின்ற நெருப்பை ஒரு சொட்டுத் தண்ணிர் அணைக்க முடியுமா என்ன? தண்ணீர் அளவு கூடுதலாக வேண்டும். அது போலவே, முன்னைய ஊழின் வலிமையைக் கடப்பதற்கு ஏற்றவாறு முயற்சி அமையவேண்டும். கருங்கல்லை உடைக்கக் கையின் வலிமை போதாத பொழுது, கடப்பாறையின் வலிமையையும் துணையாகச் சேர்த்துக் கொள்ளுகிறோம். அதுபோல் ஊழின் வலிமையை மாற்ற நம்முடைய முயற்சி மட்டும் போதாது. நம்மினும் வலிமையுடைய