பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

275


அதற்குப் பாண்டியன் நெடுஞ்செழியனும், சேரமான் கணைக்கால் இரும்பொறையும் சிறப்பான சான்றுகளாவர். உலகு புகழினை ஏத்துகிறது; ஒளிபடைத்த புகழினை ஏத்துகிறது. எத்தகைய ஒளியை? தமக்கு இழிவு வந்துழி, உயிரைக் கொடுக்கும் சான்றோரின் ஒளிபடைத்த புகழையே உலகு ஏத்துகிறது. இதனை,

இளிவரின் வாழாத மான முடையார் :
ஒளிதொழு தேத்தும் உலகு

என்ற குறளால் அறிக

நம்முடைய நாடு பாரத நாடு. நாமனைவரும் பாரத குலம். இந்தப் பாரத குலத்துக்கு ஏற்ற நாட்டொழுக்கங்களை நாம் சிறப்பாகப் பெற்று, சிறந்த குடிமைப் பண்புகளோடு, நாணமும், மானமும் போற்றி வாழவேண்டும் என்பதே திருக்குறள் கூறும் கருத்து.

பெருமையும் சால்பும்

<மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் பெறுதற்குரிய செவ்விகளை - குணங்களைப் பெரிதும் உடையனாகி அவற்றின் காரணமாக மற்றவர்களால் மதிக்கப்படுதல் பெருமை என்ற சிறப்பாகும். ஊன் உடம்பு எடுத்த பல வகை உயிரினங்களுக்குள்ளும் மனிதன் பிரித்துச் சுட்டியறியப்படுதலும் பேசப்படுதலும் அவனுடைய சாதனைகளைப் பொருத்தும் பெருமைகளைப் பொருத்துமேயாம். அங்ஙனம் வாழாதார் வாழ்வு மதிக்கப் பெறுவதில்லை. ஏன்? மனித வாழ்வாகவே கருதப்படுவதில்லை. பெருமை அரிய விலைகொடுத்துப் பெறக்கூடிய ஒன்றாகும். என்ன விலை? பொன்விலையா? இல்லை; இல்லை! சாதனையே விலை! செய்தற்கரிய சாதனைகளைச் சாதிக்க வேண்டும் என்ற