பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெருமை பெருமைக்குரியது. அது குணங்களையே பார்க்கும்; குற்றங்களை நாடாது குற்றத்தினை மறைக்கும். சிறுமையோ குணங்களை நாடாது; குற்றங்களையே காணும்; குற்றங்களைத் தூற்றும் பிறர் குற்றத்திலேயே குளிர்காயும். பெருமை புகழ்ச்சியால் புகழ்பெறும். இகழ்ச்சியால் சிறுமை, பெருமை பெற முயலும். உணர்வில் தோன்றுவனவெல்லாம் தோன்றிய உணர்வு நிலைகளையே பிரதிபலிக்கும். இதுவே நியதி. புகழுணர்வில் தோன்றுவனவெல்லாம் புகழே பெற்று விளங்கும்; இகழுணர்வில் தோன்றுவனவெல்லாம் இகழ்ச் சியே பெற்று விளங்கும்.

அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான்
குற்றமே கூறி விடும்

என்பது குறள்.

"குற்றமே கூறிவிடும்” என்பதனால், குணங்களைக் கூற மாட்டார்கள் என்று உணர்த்தப்பெற்றது. பல குணங்களால் உயர்ந்து பெருகிய சிறப்பின் காரணவீணான வம்புகளுக்கு ஆளாகமாட்டார்கள். தம்முடைய அறச் செயல்களுக்குத் துணையாக இருப்போரைத் தாழ்ந்து துணையாக ஏற்றுக் கொள்வர். சான்றோருக்குப் பகைவர் இரார். ஒரோவழி இருந்தாலும் அந்தப் பகைவரை மனம் மாற்றித் துணையாக்கிக் கொள்ளவே சான்றோர் முயற்சி செய்வர்.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

என்பது குறள்.

சாதாரண மனிதர்கள் பெரிய மனிதர்களிடத்தில் தோற்பதைப் பெருமையாகக் கருதுவர். அதாவது சாதாரண மனிதர்கள் தம்மினும் வலியாரிடத்துத் தோல்வி கொள்வது இயற்கையே. அதைப்பெரிதெனக் கருதுதல் இழுக்காகும். சான்றோர் தமக்கு ஒப்பில்லாதாரிடத்தில் தோல்வி கிடைத்-