பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

290

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மறந்துவிடக் கூடாது. நற்குணங்களால் உள்ளத்தை வலிவூட்டிக் கொள்ளவேண்டும். பிறருக்கும் பயன்பட வாழ்தல் என்ற உயர்ந்த அற ஒழுக்கத்தில் ஒழுகவேண்டும். மறந்தும் பகைமை பாராட்டக் கூடாது. யாரையும் நினைப்பாலும், சொல்லாலும் இகழக்கூடாது. இத்தகு பண்பிற் சிறந்த வாழ்க்கையையே திருக்குறள் உலகம் காட்டுகிறது. திருக்குறளின் பண்பாட்டுலகத்தில் நாமனைவரும் வாழ வேண்டும்.

பயனற்ற செல்வம்

லகியல் வாழ்க்கையின் அமைப்பும் வளர்ச்சியும் செல்வத்திலேயாம். செல்வம் ஒரு சிறந்த கருவி. செல்வம் இன்பத்தின் ஊற்று; மகிழ்ச்சியின் அடிப்படை, அறத்தின் விளைநிலம். ஆயினும் தகுதியில்லாதார் கையில் செல்வம் சேருமாயின் துன்பத்தைத்தரும். செல்வமுடைமையைவிடச் செல்வமுடையாருடைய தகுதி, தரம், திறன் கவனத்துக்குரியன. செல்வத்தின் பயன், செல்வம் உடையானைப் பொறுத்து அமைவதேயாம்.

உயிர்கள் முழு நிறைத் தகுதியைப் பெற்று வளர்வதற்கே வாழ்க்கை வாழ்க்கையில் உயிர்களுக்கு வழங்கப்பெற்ற உரிமை நுகர்தலும் அனுபவித்தலுமாகும். நுகர்ந்து அனுபவிப் பதன் வழி உயிர்களின் வேட்கை தணிகிறது. வேட்கை தணிந்துழி முழுநிறைவுடையன ஆகின்றன. உயிர்களின் நுகர்ச்சிப் பொருள்களைப் பெறுதற்கே செல்வம். செல்வத்தைப் பெற்றவன் அதன் பயனைத் துய்க்காமலும், அனுப விக்காமலும் இருப்பானாகில், அவன் இறந்தவனாவான். உயிருடலொடு கூடிய வாழ்க்கையின் இயல்பு நுகர்தல். அனுபவித்தல், மகிழ்தல், மகிழ்வித்தல், இன்புறுதல் இன்புறுத்தல் ஆகியனவாம். இவற்றைச் செய்யாதவர்களின்