பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

299


பொழுது நாணுதல் வேண்டும். இந்த நாணமும், உடலில் வெளிப்படுவதன்று; உள்ளத்தில் வெளிப்படுவது.

கருமத்தால் நாணுதல் நானுத் திருதுதல்
நல்லவர் நாணுப் பிற

என்பது குறள்.

மக்களுக்கெல்லாம் இன்றியமையாத் தேவை ஊண், உடை. இவை எல்லா மக்களுக்கும் வேண்டிய பொதுப்படையான தேவைகளே. இதில் எந்த மனிதருக்கும் வேற்றுமையில்லை. இந்தப் பொதுப்படையான தேவைகளைப் பெற்று வாழ்தல் மனிதனுக்குச் சிறப்பாகாது. நல்லன அல்லாதவற்றைக் காணும் பொழுது தோன்றும், நாணத்தைப் பெற்று வாழ்தலே சிறப்பாகும். இதனை,

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம வேறல்ல
நானுடைமை மாந்தர் சிறப்பு

என்கிறது குறள். ஊணும் உடையும் இனப்பெருக்கமும் மாந்தர்க்கெல்லாம் பொது என்று கருத இடமிருக்கிறது. 'எச்சம்' என்ற சொல்லுக்கு 'மக்கட்பேறு' என்று பொருள் கொள்ளலாம். ஆனால் "ஊணுடை அச்சம்” என்ற பாடமும் உண்டு. உணவினுடையது அச்சம் உலகத்து உயிர்க்கெல்லாம் வேறுபாடுடையன அல்ல. எனவே, உணவின் குறைபாடுகளுக்கு அஞ்சும் அச்சம் எல்லா உயிர்க்கும் ஒக்கும். மற்றும் தமது நெறிமுறை பிறழ்ந்து நிலைக்கு உள்ளஞ்சி நாணுதலே சிறப்புடைய மாந்தர்க்கு அழகு என்றும் சிந்திக்கலாம்.

உயிர் அருவப் பொருள்: உருவமற்றது. உருவமின்மையால் பொருளின் உண்மை பொய்யாகாது. உருவமற்ற பொருள்கள் ஏராளமானவை உலகத்தில் இருக்கின்றன. மனம், மின்சக்தி, காற்று ஆகியவை வடிவமற்றைவையேயாம்.