பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

307



கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்

என்பது குறள்.

குடி செயலுக்கு ஆள்வினையாற்றல் வேண்டும். ஆற்றலைப் பயனுறத் தக்கவகையில் இயக்க நிறைந்த அறிவும் தேவை. இவையிரண்டும் பெயரளவில் இல்லாமல் செயல்பட வேண்டும். சிலர் செயல்படுவர். ஆனால் இடையீடுகள் நிகழும். தொடர்ச்சியின்றி விட்டுவிட்டுச் செயல்படுகிறவர்களும் வீழ்ச்சியையே அடைவர். ஓயாது செயல்பட வேண்டும். ஒரு நொடிப்பொழுதும், ஓயாது தொடர்ந்து இடையீடின்றி ஒரு செயலைப் பிறிதொரு செயல் தொடரச் செயல்படவேண்டும். இதனை,

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி

என்ற குறளால் அறியலாம்.

தாம் பிறந்த குடியை உயர்த்தும் பணியில் ஈடுபடும் பொழுது தெய்வம் வரிந்து கட்டுக்கொண்டு வந்து துணை நிற்கும் என்பது குறட் கருத்து. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய வாழ்க்கையைப் பற்றி ஆயிரம் ஆயிரம் கற்பனைகள்; கனவுகள். இந்த இலட்சியங்களை-இன்ப வாழ்க்கையை அடைய முடியாமல் அல்லற்படுகின்றனர். திருவள்ளுவர் இன்ப இலட்சியங்களை அடைந்து மகிழ, எளிய வழி ஒன்று காட்டுகின்றார். அதாவது, தன்னுடைய குடி தாழ்ந்து கெடாமல் உயர்ந்து விளங்கப் பணி செய்யும் ஒருவர்க்கு அவர் கருதிய கருத்தும் தானே முடியும்.

குடி செய்தலாகிய சமூக மேம்பாட்டிற்குரிய பணிகளைச் செய்தல் உயர்ந்த திருத்தொண்டு. அதனாலன்றோ சிவஞானச் செல்வர்களாக விளங்கிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பசி நீக்குதல், நோய் நீக்குதல்,