பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

313


வறுமை அங்கு வாழ்வோரின் மானத்தைப் பறை சாற்றிக் கப்பலேற்றிக் கொண்டிருக்கும்.

ஆனால் இன்றோ கொடுமை! ஒரே குடியைச் சார்ந்த ஒருவன் வளத்துடன் வாழ்கிறான்; பிறிதொருவனோ வறுமையில் வாடுகிறான். அவனுடைய வறுமையை இழித்துப் பேசி, தன்னுடைய மானத்தைத் தானே விலை கூறுகிறான். பெருமை, சிறுமை, மதிப்பு, மதிப்பில்லாமை ஆகியவை தொடர்புடைய மான உணர்ச்சிகள்கூட, குடி செய்வானுக்கு இருக்கக்கூடாது என்பது வள்ளுவர் கருத்து.

பிறப்பால், சார்பால், அந்நியனாக இருப்பவர்களிடத்திலேயே மானம் கருதுதல் வேண்டும். அது போல, தன்னொழுக்கத்திலேயே மானம் போற்றுதல் வேண்டும். அதனை விட்டுவிட்டு, நம்மைச் சார்ந்த ஒருவர் மதிக்கத் தவறிவிட்டமையைப் பெரிய மான உணர்ச்சியைக் கருதக்கூடாது. இதனை, வள்ளுவப் பெருந்தகை,

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

என்று எவ்வளவு அழகாகக் கூறுகிறார்!

தாம் பிறந்த குடியினுடைய-குடும்பத்தினுடைய குற்றங்களை மறைக்கின்ற இனிய பணியைச் செய்பவர்கள் துன்பங்களை அடையலாம். அவர்தம் வாழ்க்கை இன்பத்திற்கு மாறாகத் துன்பத்திலேயே சுழன்று அல்லற்படலாம். அதுவும் போரில் விழுப்புண் படுதலைப் போல பயனுடை யதே என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஆதலால், இழப்புகளையும் துன்பங்களையும் காட்டி ஒருவர், குடிசெயலிலிருந்து விலகக்கூடாது. பொதுவாக அறியாமை, பொருளற்ற வறுமை, நோய் இவற்றினால் வரும் துன்பமே துன்பமெனக் கொள்ளத்தக்கன. மாறாக ஓயாத உழைப்பு, உதவுதலால் வந்த