பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

323


பண்படுத்தி உவகை தராமல்-உற்ற பசிக்கு உரமென்னும் சோறிடாமல்-உற்ற தண்ணீர் வேட்கைக்குத் தண்ணீர் தராமல்-நோய்க்கு மருந்திடாமல் நிலமென்னும் நல்லாளிடத்தில் பயன்காண முடியாது.

ஆதலால். எழுமின்! கதிரவன் எழுவதற்கு முன் எழுமின்! நிலமென்னும் நல்லாளைக் கையில் ஏருடன், தலையில் எருவுடன் ஓடிச் சென்று காண்மின் உறவு கொண்மின்! உழுமின் ! நீவிர் வாழலாம்! உலகமும் வாழும் !

வறுமையின் கொடுமை

யிர்கள் நுகரும் இயல்பின. நுகர்ந்து அனுபவித்தல் உயிர்களின் பிறப்புரிமை. உயிர்கள் பூரண வளர்ச்சி பெறாத நிலையில் உடல் தேவைகளையே நுகரும். வளர்ச்சி பெற்ற நிலையில் திருவருளையும் சுவைத்து நுகரும்.

உயிர் உடலிடைத் தங்கிப் பயிலும் வாழ்க்கைக்கு நுகரும் பொருள்கள் தேவை. அவை யாதொன்றும் இல்லாது அல்லற்படுவது வறுமையாகும். வறுமை, இன்பத்திற்கும் கடவுளுக்கும் கொடிய பககையாகும்.

மாணிக்கவாசகர் வறுமையைத் "தொல்விடம்" என்றார். வறுமையைப் போல் உலகில் கொடியது வறுமையேயாம் என்பது திருவள்ளுவர் முடிபு.

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது

என்பது குறள்.

வறுமை என்பது என்ன? வாழ்க்கையின் தேவைகள் பல திறத்தன. ஆனாலும், அவசியம்-அவசியமின்மையைக் கருதாமல் பலர் நிறைய ஆசைப்படுவார்கள். அவசிய