பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

325



இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு

என்று கூறுகின்றார்.

வறுமை தனித்து வரும் துன்பமல்ல. வறுமைக்கு நிறையப் பரிவாரங்கள் உண்டு. வறுமை தன்னுடைய பரிவாரங்களுடன் வந்து ஆக்கிரமித்து அழித்து நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவடும் வறுமையைத் தொடர்ந்து கவலை வரும். கவலையைத் தொடர்ந்து சோம்பல் வரும். பின் நோய்! இப்படி ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் வறுமையின் நுழைவாயிலை அடைந்தால் மற்றத் துன்பங்கள் அனைத்தும் வந்து விளையும். இதனை,

நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்

என்கிறார்.

வறுமை, பரம்பரையாக வந்த பண்பாட்டையும் கெடுக்கும். நல்ல குடியில் பிறந்தோர் எப்பொழுதும் சோர்வின்றி இருப்பார்; நல்ல சொற்களைேேய பேசுவர்; ஆயினும் வறுமை வந்துற்றபோது சோர்வடைவர். தகாத சொற்களைப் பேசுவர். இதனை,

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்

என்று கூறுகிறார்.

கற்றுணர்ந்து மெய்ப்பொருள் கண்டாராயினும் அவர் வறுமையினராயின், அக்கல்வி பயன்படாது. சிறந்த மெய்ப்பொருளை நன்றாக உணர்ந்து கூறினாலும் பயன்படாது. கேட்பவர்கள் கேட்கமாட்டார்கள். இவர்தம் சொற்களைக் கேட்பவர்கள், இவர்தம் குறையைக் கேட்டு, அக்குறையை நிறைவு செய்ய வேண்டியதிருக்குமே என்று கருதி இவரைக்