பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

31


செய்தியே அறிவல்ல. கேள்வி அறிவு பெறுவதற்குரிய வாயில்; ஆனால், கேள்வியே அறிவல்ல. சிந்தனை அறிவு பெறுவதற்குரிய வாயில்; ஆனால், சிந்தனையே அறிவல்ல.

அறிவு என்பது நுட்பமானது, திட்பமானது. ஒருவர் அறிவுடையவர் அல்லது அறிவில்லாதவர் என்பதை அவருடைய பேச்சுக்களைக் கொண்டும் அறிய முடியாது. அவர் எழுதும் நூல்களைக் கொண்டும் அறிய முடியாது. அவருடைய வாழ்க்கையே அறிவையும் அறியாமையையும் காட்டும்.

அதாவது, யாதொரு வகையான துன்பத்தையும் தொடர்ந்து அனுபவிக்காதவர்கள் அறிவுடையோர்கள். அதுபோலவே பிறர்க்குத் துன்பம் செய்யாதவர்கள் அறிவுடையோர்கள். இதனை வள்ளுவம் அறிவு அற்றம், காக்கும் கருவி என்று எடுத்துக் கூறுகிறது. அதாவது, உயிர்களைத் துன்பத்தொடக்கினின்றும் பாதுகாப்பதே அறிவு. இத்தகைய அறிவைப் பெறுதற்குரிய வாயில்களில் முதன்மையானது சிந்தனை.

அறிவு, புறத்தில் இருந்து மட்டும் பெறக்கூடியதில்லை. ஆன்மாவின் ஆழமான அடிமனம் தொழிற்படுவதன் மூலம் சிந்தனை பிறக்கிறது. அச்சிந்தனை அகத்தே நிகழும் உணர்வுப் போராட்டங்களைத் திறனாய்வு செய்கிறது. சிந்தனையுடையவன் வாழ்க்கையில் நாள்தோறும் புதுமை காணலாம்."பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!” என்ற சொற்றொடர் சிந்தனையின் செழுமையைக் காட்டவல்லது.

சிந்தனை இயல்பாகத் தொழிற்படாது போனால் சிந்தனையைத் துண்டித் தொழிற்படுத்த நல்ல நூல்களைக் கற்றலாகிய கல்வி துணைசெய்கிறது. பாத்திரத்தைத் துலக்கல் போல ஆன்மாவைத் துலக்குவது கல்வி கற்றல், மிக