பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

351


ஊருணி, தேவைப்படுவோர் அனைவரும் தண்ணீர் எடுத்துக் குடிப்பதற்கு உரிமையுடையது. அதைத் தடுப்பார் யாருமில்லை. ஊருணி, தண்ணீர் எடுத்து அனுபவிக்கப்படுவது. பழுத்த பயன் மரத்தின் கனிகளை அனைவரும் எடுத்து அனுபவிக்கலாம். பயன் மரம் பழங்களைத் தருவது. உரிமை எல்லைகளைக் கவனத்தில்கொண்டல்ல. மருந்து மரம் உதவிசெய்தலில், தன்னை மறந்த நிலையில் பயன்பாட்டு நிலை ஒன்றே காணப்பெறுகிறது. நோயுடையார் எல்லாரும் பயன்படுத்தலாம். ஒப்புரவை விளக்கப் பயன்படுத்தியுள்ள இந்த உவமைகள் இன்றும் எடுத்தும், பறித்தும், வெட்டியும் பயன்படுத்துவனவாகவே அமைந்துள்ளன. ஆயினும், ஊருணி, பயன் மரம், மருந்து மரம் ஆகியன மனிதர்கள் தம் படைப்பாற்றலைக் கொண்டு படைத்தவை என்பதை நிறைவிற்கொள்க!

ஊருணியை அகழ்ந்தவன் மனிதன்! அந்த ஊருணியில் தண்ணீரைக் கொணர்ந்து தேக்கியது யார்? மனிதர்தாம்: ஊருணியை அமைத்துத் தேக்கும் கடமை பொறுப்புணர்வுடன்-கூட்டுப் பொறுப்புடன் செய்யப் பெற்றால்தான் ஊருணியில் தண்ணீர் நிறையும் பலரும் எடுத்துக் குடிக்கலாம். பயன்தரு மரங்களை வளர்த்தால்தான் கனிகள் கிடைக்கும். தின்று அனுபவிக்கலாம். இங்கும் மனிதனின் படைப்பைத் தொடர்ந்துதான் நுகர்வு வருகிறது. ஒப்புரவு வருகிறது. மருந்து மரங்களையும் நட்டு வளர்த்தால்தான் மருத்து மரத்துப் பட்டையைச் சீவிப் பயன்படுத்தலாம்; பயன்படுத்த முடியும். ஆதலால், ஒப்புரவாண்மையுடன் வாழ முதல் தேவை உழைப்பு! கூட்டு உழைப்பு! பொருள்களைப் படைக்கும் கடமைகள் நிகழாத வழியில் ஒப்புரவு வாழ்வு மலராது. கடமைகள் இயற்றப்பெறாமல் ஒப்புரவு தோன்றாது. ஒரோவழி தோன்றினாலும் நிலைத்து நில்லாது. கடமைகளில்-பொருள் செய்தலில் ஒவ்வொருவரும் கூட்டு