பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

59


தாகவும், சமுதாயத்தின் மேடு பள்ளங்களைத் தோற்றுவித்துப் பேணிப் பாதுகாப்பதாகவும் விளங்கும் கொடுர நிலையைப் பார்க்கிறோம்.

நந்தமிழ் மக்களோ இறைவனை மன்றில் ஆட வைத்தனர். மன்றம் பொது இடமின்றோ? பொருள் மாயம் செய்வோம் என்று கருதி, பொதுவிலும் ஆட வைத்தனர். இன்று நம்முடைய திருக்கோயில்கள் பொதுவில் விளங்கும் புனிதத் தன்மையை இழந்து கிடக்கின்றன.

திருக்குறள் காட்டும் சமயம், காழ்ப்புகளைக் கடந்த கவினுறு நெறி; மேடு பள்ளங்களைக் கடந்த மேலான நெறி; ஒன்றே குலம் என்ற உத்தம நெறி; தடைகளைக் கடந்த பொது நெறி ; இன்ப நெறி; வையத்துள், வாழ்வாங்கு வாழ வைக்கும் சமயநெறி. இத்தகு பொதுமைச்சமயத்தில் திருக்குறள், உலகில் எந்தச் சமய நூல்களையும் விட மேம்பட்டு விளங்குகிறது.

இறைவனைத் திருவள்ளுவர் வாழ்த்துகிறார். நம்மையும் வாழ்த்தத் துரண்டுகிறார். ஆனால், அவர் இறைவனைக் கண்டு காட்டும் முறை, பொதுமை முறை என்பதை மறுக்க முடியாது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்பதுகுறள். உலகின் எல்லா மொழிகளின் எழுத்துக்களுக்கும் அகர ஒலி நேரிடையாகவோ மறைமுகமாகவோ அடிப்படை ஒலியாக-மூலமுதலாக விளங்குகிறது. அதுபோல, உலகின் எல்லா உயிரினங்களுக்கும் இறைவனே அடிப்படை ஆற்றலாக, ஆதாரமாக விளங்குகிறான் என் பதன்மூலம் உலக உயிர்களின் வழிபாட்டியக்கத்தை, மனிதகுல ஒருமைப்பாட்டியக்கத்தை வாயார வாழ்த்தித் தொடங்கி வைக்கிறார். மனிதகுல ஒருமைப்பாடு பேச்சாலும் எழுத்தாலும் மட்டும் உருவாகி விடுவதன்று; நேர்மை நிறைந்த வாழ்க்கையினாலேயே மனிதகுல ஒருமைப்பாடு