பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

87



உயர் கருத்துகளே மானிட சாதியின் புகழுக்கு ஊற்று. இத்தகைய உயர் கருத்துகள் உலக மொழிகளில் உள்ளன: சமயச் சாத்திரங்களில் உள்ளன. ஆயினும் முழுமையான நலக்கருத்துகளே நமக்குத் தேவை. காலத்தின் விளைவாகச் சில உயர்ந்த கருத்துக்களோடு களையும் கலந்திருக்கும். களை நீக்குதல் கற்றறிந்தார் கடன். எந்த விலை கொடுத்தும் மனிதகுல ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற வேண்டும். ஒருமைப்பாட்டுக்குரியதான கருத்துக்களையே வற்புறுத்த வேண்டும்; விளக்க வேண்டும்; எழுத வேண்டும்! பேச வேண்டும்.

ஆனால் ஒரு தற்காப்பு விதியும் தேவை. புலிக்கும் பூனைக்கு மிடையில் ஒருமைப்பாடு நிலவத்தான் வேண்டும். ஆனால் புலி, புலியாகவே பூனையை எடுத்துச் சாப்பிடும் பட்சத்தில், பழக்கத்தில் இருக்கும் வரையில் பூனையிடம் போய், புலியிடம் நேசமாக இரு என்று பேசுவது நெறியும் அன்று முறையும் அன்று.

அதுபோலத்தான் ஆண்டான்-அடிமை; உடையார்இல்லாதார், உயர்ந்தார்-தாழ்ந்தார் என்ற வேறுபாடுகளைச் சகித்துக் கொள்கின்ற ஒருமைப்பாடு. உபதேசம் நீதிக்குத் துணை செய்யாது. ஆதலால், மனிதகுல ஒருமைப்பாட்டுத் தத்துவம் மிகமிக உயர்ந்தது. அதை நோக்கித்தான் உலக அறிஞர்கள் கருத்துக்களைத் தீட்டினர். சமய ஞானியர் சித்தாந்தங்களைக் கண்டனர். ஆயினும், வேற்றுமைகளே வளர்ந்து வந்துள்ளன. எல்லைகளே பெருகியுள்ளன. இதயங்கள் சுருங்கி வந்துள்ளன.

இன்று சுருங்கிக் காட்சியளிக்கும் மனித இதயத்தை விரிவடையச் செய்ய - வேற்றுமைகளைக் குறைக்கவேற்றுமைகளைக் கடந்த ஒருமைப்பாட்டைக் காணஒருமைப்பாடுடைய ஒருலகம் காண முயற்சி செய்ய