பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவள்ளுவர்-தம் நூல் முழுவதும் மொழியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

திருவள்ளுவரின் மொழி-தமிழ்தான் என்பதற்குச் சான்று ஏது: திருவள்ளுவர் எந்த ஒரு மொழியையும் எடுத்துக் கூறவில்லை. ஆனால் அவர் பல நூல்களின் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதற்கு நிறையச் சான்றுகள் உண்டு.

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை

என்ற திருக்குறளும்,

உலகத்தார் உண்டதென்ப தில்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்

என்ற திருக்குறளும் எண்ணத்தக்கன. பரந்த தேசீயத் தன்மைக்கு, மொழிப்பற்று தடையாக இருக்கக் கூடாது. திருக்குறள் எந்த ஒரு மொழிப்பற்றையும் வளர்க்கவில்லை. ஆதலால் "திருக்குறள் ஒரு தேசீய நூலாதற்குரிய” தகுதி முழுதும் பெற்றிருக்கிறது.


இனவெறி உண்டாக்காத இலக்கியம்

யற்கையின் அடிப்படையிலும், மெய்ந் நெறியின் அடிப்படையிலும், மனிதகுலம் ஒன்றேயாம். மனித குலத்திற்கு இடையேயுள்ள வேறுபாடுகள் மாறுபாடுகளாகா. முரண்பாடுகளும் இல்லை. அவை இயற்கையில் அமைந்த தவிர்க்க முடியாத வேறுபாடுகளேயாம். மனித குலத்தை நாட்டு அடிப்படையிலோ, நெறி நிற்கும் சமய அடிப்படையிலோ வேற்றும்ைப் படுத்துதல் தவறு.

திருவள்ளுவர், நாடு, மொழிகளைக் கடந்த சிந்தனையாளராக விளங்குவது போலவே இனங்களைக்