பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



167


என்றுதான் கூறினார். இராமனே அவரது உயிர்நிலையாக விளங்கியமையை உணர்கிறோம். எனவே காந்தியடிகளின் கடவுள் நம்பிக்கை மாசற்றது-உறுதியானது.

திருவள்ளுவர் கடவுளை மிக எளிய முறையிலே பார்த்தார். யார் யார் எந்த வடிவோடு நினைக்கிறார்களோ அந்த வடிவில் அவர்கள் உள்ளத்தில் இறைவன் வந்து சேர்வான் என்பது திருவள்ளுவர் கருத்து. காந்தியடிகள் ஏழை மக்களுக்கும், ஒதுக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்வதில் கடவுட் காட்சியைக் கண்டார்.

திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து வேறு. காந்தியடிகளின் வாழ்க்கை வேறு அல்ல. எனவே, காந்தியடிகள் காட்டிய அன்பு நெறியை-அறநெறியை-கடவுள் நெறியை நாம் கடைப்பிடித்து வாழ்வோமாக!

5. விண்ணகமாக்குவோம்!

மனிதகுலத்துக்கு ஒரு கவிஞராக-மனிதகுலம் வாழ் வாங்கு வாழ வழிகாட்ட வந்த ஒரு கலங்கரை விளக்காக-மனிதனை மனிதனாக வாழச் செய்யும் மாபெரும் கவிஞராக வாழ்ந்தவர் வள்ளுவப் பெருந்தகை.

நமது நாட்டைப் பொறுத்தவரை படிப்புப் பெருகிய அளவிற்குப் பண்பாடு பெருகவில்லை. நாட்டில் படிப்பிற்குப் பஞ்சமில்லை. பண்பாட்டிற்குத்தான் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.

வேறு எந்த நாட்டையும்விட இந்த நாட்டில்தான் பக்தி அதிகம். எனினும், எது பக்தி என்பதிலே ஒரு தெளிவான கருத்து இல்லை. எனவே, இந்த நாட்டில் வளர்கின்ற பக்தி, பொட்டல் காட்டில் மழைபெய்வதுபோல ஆகி விடுகிறது. அங்கயற்கண்ணியும் அண்ணல் சோமசுந்தரப் பெருமானும் எப்படி இருந்தார்களோ அந்த வாழ்க்கை அனுபவம் இன்று