பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



169


அடிக்கடி கண்ணாடியைப் பார்த்து முகத்தை அழகு படுத்திக் கொள்கிறோமே அதுபோல, நாள்தோறும் திருக்குறளில் நமது நெஞ்சைப் பார்த்து, உள்ளத்திலுள்ள மேடு பள்ளங்களைத் திருத்திச் சரி செய்து கொள்ள வேண்டாமா?

மனிதனுக்குத் துன்பமும் தொல்லையும் மற்றவர்களிடமிருந்து வருவதில்லை. அறியாமையின் காரணமாக நம்மிற் பலர் இந்த உண்மையை ஒப்புக்கொள்வதில்லை. இதனை, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று புறநானூறு உணர்த்துகிறது.

துன்பம் வரும்போது நாம் அதைப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பத்திற்குக் காரணம் என்ன என்று எண்ணிப்பார்க்க வேண்டும். நம்மை ந்ாமே எண்ணிப் பார்த்துச் சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை எண்ணிப் பார்த்து நாம் விமர்சனம் செய்து சிரிக்க மறந்து விட்டால், நம்மைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். துன்பம் வரும்போது, அந்தத் துன்பத்திற்குக் காரணம் நமது அறியாமையும் முட்டாள்தனமும்தான் என்று உணர்ந்து சிரிக்க வேண்டும்.

வள்ளுவம், ராஜா ராணியைப் பற்றிப் பாடிய நூல் அல்ல. இங்கு நடமாடுகின்ற சாதாரண சராசரி மனிதனைப் பற்றிச் சராசரி மனிதனுக்காகப் பாடப்பெற்ற வாழ்க்கை நூல் அது.

மனிதன் தனது கடமைகளைச் செவ்வனே செய்வதன் மூலம் கடவுள் வழிபாடு செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும். இன்று உலகெங்கும் வாழ்கின்ற 300 கோடி மக்களில் 10-ல் ஒரு பகுதியினர் சோற்றுக்கின்றித் துன்பப்படுகிறார்கள் என்றால், மனித சமுதாயத்திற்கே இது ஒரு அறை கூவல் இல்லையா? மனிதன் உழைப்பு உடையவனாக-உலையாத முயற்சியுடையவனாக இருந்து மனித சமுதாயத்தை