பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வற்றை எடுத்துச் செல்லாமல், பிடிக்காதவற்றைப் பற்றியே பேசிப்பேசி மானிடச் சந்தையைக் கலகக்காடாகவே ஆக்கி வருகிறார்கள். மானிடச் சந்தை கலகக்காடாகவே மாறிக் கொண்டும் வருகிறது. பொதுவாக, இன்று மானிடச் சந்தையிலே 95 விழுக்காடு நல்லவர்களாக இருந்தாலும், கெட்டவர்களாக இருக்கின்ற 5 விழுக்காட்டினரின் ஆற்றல் எஞ்சிய 95 விழுக்காட்டினரையும் ஆட்டிப் படைக்கிறது. எனவேதான் மானிடச் சந்தையில் நல்லவர்களாக மட்டும் இருப்பது போதாது-நல்லவர்கள் வல்லவர்களாகவும் இருக்க வேண்டுவது இன்றியமையாதது என்று நான் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

கிரேக்க நாட்டின் தலைநகரம்; பல்லாயிரக் கணக்கான மக்கள் நடமாடும் முச்சந்தி. பட்டப்பகல் நேரம் ஒரு பெரியவர் கையிலே தீவட்டியை ஏந்திக்கொண்டு எதையோ தேடிக்கொண்டு வருவது போல வருகிறார்.

‘என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார் ஒருவர். அந்தப் பெரியவர் சாவதானமாக,

'மனிதனைத் தேடுகிறேன்’ என்று பதில் கூறினாராம். இந்தப் பதில் முதலில் நமக்குச் சற்று வியப்பாகவும் புதிராகவும்தான் இருக்கும்.

'விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு
நூல் கற்றாரோ டேனை யவர்'

என்று பேசுகிறார் திருவள்ளுவர். இன்று, மானிடச் சந்தை புறத்தே போர்த்திக்கொண்டு வாழ்கிறதே தவிர, அகப்போர்வையை இழந்துவிட்டது. இந்த நிலைமையால் மானிடச் சந்தை அழுகிப்போனது போலத் தோற்றம் அளிக்கிறது. இன்றைய மனிதன் வெள்ளத்தை விலங்கை பேயை பெருந்துன்பந்தரும் நோயைக் கண்டுகூட அஞ்சவில்லை. தன்னையொத்த மனிதனைக் கண்டே அஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான். அவ்வளவு தூரத்திற்கு வாழ்க்கைப்