பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் விண்னும்



177


இறைவன் தூய ஒளிபொருந்திய அறிவாக விளங்குபவன் என்ற அடிப்படையை மனத்தகத்தேகொண்டு ‘வாலறிவன்’ என்று பேசுகின்றார் வள்ளுவர். வள்ளுவத்துக்கு முன் எழுந்த நூல்களில் இதனைக் காண முடியுமா?

அடுத்து, பலாப்பழத்தைத் திருத்துவது என்கிறோம். அப்படியானால், பலாப்பழத்தில் உள்ள சுவையற்ற பகுதிகளை உண்ணுதற்கு ஒவ்வாதனவற்றை நீக்கிப் பலாச் சுளையை எடுப்பதுதான். அதுபோல, சீர்திருத்தம் என்றால், நடைமுறைக்கு ஒவ்வாதனவற்றை நீக்கிவிட்டு, நாட்டுக்கும் வாழ்க்கைக்கும், நடைமுறைக்கும் ஏற்றவற்றை ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுதலேயாகும்.

"மரபு நூல்கள்” எனப்படுவன தமிழகத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ‘முன்னோர் சொல்லைப் பொன்னே போல் போற்றுதும்’ என்பது மரபு. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று வள்ளுவர் பேசுகிறாரே இது சீர்திருத்தமா இல்லையா? ‘சொன்னதை ஆராய்ந்துபார்’ என்பதே சீர்திருத்தம்தானே? எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ணியர் திண்ணியார் ஆகப் பெறின்’ என்று கூறுவதன் மூலம், திருவள்ளுவர் எண்ணத்திற்கு வலிமையுண்டு என்று வலியுறுத்துகிறாரே, அது சீர்திருத்தம்தானே? எண்ணினால், எண்ணத்திற்குத் திண்மை ஏற்பட்டால் கை கால்களுக்கு வலிவு வந்துவிடும்; "நீ எண்ணிய எண்ணியங்கு எய்துவாய்?" என்பது சீர்திருத்தம்தானே? திருவள்ளுவர், வாழ்க்கையில் உள்ள மாசுகளை நீக்கி, வையகம் வாழ்வாங்கு வாழவேண்டுமென்று விரும்பித் திருக்குறளைச் செய்தார்; எனவே திருவள்ளுவர் வற்புறுத்தியது சீர்திருத்தமே என்று உறுதியாகக் கூறலாம்.

திருவள்ளுவர்க்கு முன்தோன்றி நூல் செய்த தொல்காப்பியர் நாட்டில் இருந்த நிலைமையை உள்ளவாறு

தி.13.