பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூட இல்லாமையும் வேண்டும். திருக்குறளில் இரட்டுற மொழிதலும், பயனில் சொற் கூறுதலும், ஒழுக்கக் கேடுகள் எனக் குறிப்பிடப் பெறுகின்றது. திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தல் மிகவும் எளிதேயாகும். திருக்குறள் வாழ்க்கை முறையை திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறி முறைகளை ஏற்றுக் கொள்ளுதல் சாத்தியமான ஒன்றேயாகும்! திருக்குறள் கூறும் ஒழுக்க நெறிகள் கால எல்லைகளுக்குக் கட்டுப்பட்டனவல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காட்டிய நெறிமுறைகளே யாயினும் இன்னும் கடைப்பிடிக்கக்கூடியனவாக உள்ளன. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகள், சாதி, இனம், பால், சமயம், மொழி, பருவம் ஆகியனவற்றால் மாறுபடக் கூடியனவல்ல. ஒரே மாதிரி ஒழுக்க நெறியை எடுத்துக் கூறப் பெற்றுள்ளது. திருக்குறள் ஒழுக்க நெறி உலகப் பொதுநெறி. மனிதகுலத்தின் வாழ்க்கை நெறி.

திருக்குறள் காட்டும் ஒழுக்க நெறிகள் கற்பனையில் தோன்றியனவல்ல. நடைமுறைப்படுத்த முடியாத அளவு அருமையுடையனவல்ல. மிகமிக எள்ளிய ஒழுக்க நெறிகளேயாம். உலகியலுக்கும், உடலியலுக்கும், உயிரியலுக்கும், மாறுபட்ட எந்த ஒன்றையும் திருவள்ளுவர் ஒழுக்க நெறியாக வலியுறுத்தவில்லை. திருக்குறள் ஒழுக்க நெறிகளை நடை முறைப்படுத்த முடியவில்லை என்றால், மனிதர்களின் தரம் வீழ்ந்திருக்கிறது என்பது கருத்தேயொழிய அது வலியுறுத்தும் நெறி கடுமையானதல்ல. மேலும், திருக்குறள் ஒழுக்க நெறிகளை எடுத்துக்காட்டும் பொழுதும் இயைந்தவாறு காட்டுவதானால், சிறந்து விளங்குகிறது. நடைமுறைப்படுத்த முடியாத ஒழுக்க நெறிகள் எந்த ஒன்றினையும் திருவள்ளுவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தவும் இல்லை. அதனாலும் திருக்குறளின் புகழ் சிறந்து விளங்குகிறது. மேலும், ஒழுக்க நெறிகளைக் காட்டும்பொழுதும் இயைந்தவாறு, ஒன்றுக்கொன்று தொடர்பாக முறைப்