பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்



207


சொல்லி, நல்லன செய்வனவாக இருந்தாலும் மனம் தூய்மைக் கேடுறாது.

ஆதலால், மனம் தூய்மையுடையாராதலே மனிதத் தன்மையின் முதல் முயற்சி. அதுவே இன்ப வாழ்க்கையைத் தரக்கூடிய சிறந்த முயற்சி. மனம் தூய்மையுடையவராக வாழ்தலே அறவாழ்க்கை. மனம் தூய்மையில்லாது மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காகவும் புகழுக்காகவும் செய்யப் பெறும் செயல்கள் ஆரவாரத் தன்மையுடையன. இரைச்சல், ஒலி மட்டுமே! இரைச்சலைக் கேட்டுப் பொருள் கொள்ள முடியாது; கருத்துருவம் பெற முடியாது. அதுபோல ஆரவாரம் அன்புச்சார்பில்லாதது; இதயத்தொடர்பில்லாதது; அறமல்லாதது; ஆரவாரமான உலகத்திலிருந்து விலகி, சமுதாயம் தழுவிய அறவாழ்க்கையை மேற்கொள்ள மனத்தூய்மை பெறுவோம். சமுதாய வாழ்க்கை வாழ முயன்றாலே எளிதில் மனத்துாய்மை வரும். யார்மாட்டும் அன்பு, மற்றவர் வாழ்வு கண்டு மகிழ்தல், மற்றவர்களை வாழ்விக்க முயற்சி செய்தல், மற்றவர் வாழ்க்கைக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தல் ஆகியன மனத்தூய்மை பெறுதற்குறிய வாயில்கள். மனத்தூய்மை உடைய வாழ்க்கையே அறம் சார்ந்த வாழ்க்கை.

"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”

17-2-86.
2. வாழ்வாங்கு வாழ்க!
(1)

வாழ்க்கை வெற்றி பெறவேண்டும், பயனுடையதாக வேண்டும் என்றால், அதற்குச் சில இன்றியமையாத பண்புகள் தேவை. அவற்றுள் தலையாயது பணிவு. அதாவது யார் மட்டும் பணிவாக நடந்து கொள்ளுதல். பணிவு என்பது