பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அடக்கமுடைமையின் முதிர்ச்சியில் தோன்றுவது. பணிவு இயற்கையாக அமைதல் வேண்டும். அதற்கு வேறு பின்னணிகள் இருக்கக்கூடாது. இயலாமை காரணமாகப் பணிதல் பணிவுடைமையன்று. பணிவுடைமைக்குரிய இலக்கணத்தை எழுத்தில் எழுதிக்காட்ட இயலாது. உடல் வணக்கம் மட்டும் பணிவாகாது. உடல் வணக்கம் பணிவுடைமையில் சேராது என்றும் சொல்ல முடியாது. ஒருவரின் பணிவு அல்லது வணக்கம் பணிவின் பாற்பட்டதா அல்லது நடிப்பா என்பதை எளிதிற் பிரித்துக் காணமுடியும். உடல் வணக்கம் நாவடக்கம் ஆகியன பணிவின் பாற்சாரும்! ஏன்? மனஅடக்கமும் கூடத்தான்!

மற்றவர்களுடைய மதிப்பினைக் கருதியும் வருந்தா நிலை வேண்டியும் பணிவாக இருத்தல் வேண்டும். சில பொழுது பணிவின் காரணமாகத் தமது அறிவு, ஆற்றல் ஆகியவற்றைக்கூட முற்றாக வெளிக்காட்டாது அடங்கியிருத்தலும் பணிவின்பாற் சாரும் பணிவுடையாரிடத்தில் தான் மற்றவர்கள் எளிதில் பழகுவர்; மனம் ஒப்பிப் பழகுவர். அப்பழக்கம் பல பண்பாடுகளையும் பயன்பாடுகளையும் கொண்டுவந்து சேர்க்கும்.

பணிவு எளிதில் வாராது. பணிவு, வாழ்க்கையில் சிறந்தோருக்கே தோன்றும் உயர்ந்த இலக்கணம். முற்றிய கதிர்மணிகளுடைய செந்நெற் பயிர்கள் தாழ்ந்து தரையிற் கிடத்தல்போல, நிறைந்த அறிவும் எதிரில் ஆற்றலும் உடையவர்கள்தாம் பணிந்துபோவர். அது கோழைமையன்று. குன்றில் உயர்ந்து விளங்கும் கொள்கையின் மாட்சி! மண்ணில் தாழ்ந்து தாழ்ந்து செல்லாத வேர்களைப் பெறாத மரங்கள் விரிந்து வளர்ந்து விண்ணோக்கிச் செல்ல இயலுமா? அவை பயன்தரும் மரங்களாகத்தான் விளங்க முடியுமா? ஒருவர் நிற்க, தான் அமராமை. ஒருவரைக் கண்டுழி மலர்ந்த முகத்தோடு வரவேற்று அவரை இருக்கை