பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனை மலர்கள்



217


இன்சொல் அளிப்பதை அறிந்திருந்தும் ஏன் வன்சொல் வழங்குகிறீர்கள்?

வன்சொல், வாளினும் கொடிது; நாவினால் வன் சொல் கூறிச் சுடுவது தவறு. வன்சொல் இன்ப அன்பிற்குப் பகை; அறத்திற்கு முரண். வன்சொல் அமைதியைக் கெடுத் திடும். வன்சொல் வழங்கற்க! இன்சொல்லைச் சொல்லிடுக!

வன்சொல், சிறுமை பொருந்தியது. இன்சொல், பெருமையோடு தொடர்புடையது. வன்சொல் இம்மையையும் கெடுக்கும்; மறுமையையும் கெடுக்கும். நன்றைத் தரும் இன்சொல் கூறிப் பழகுக! இன்சொல்லை அணியெனப் பற்றுக!

22-3-1987
4. வள்ளுவர் வாக்கு
(1)

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.”

என்பது திருக்குறள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் மொழிந்த திருக்குறள், இன்றைய நிலையில் பூத, பெளதிக உலகம் நெருங்கி வந்துள்ளது. "உலகம் ஒரு வீதி” என்று கூறும் அளவுக்கு நெருக்கமுற வந்தவிட்டது. மண்ணில் அமைந்துள்ள சாலைகளும். விண்வழிப் பயணங்களும், தொலை பேசிகளும் உலகம் நெருங்கி வரும்படி செய்துள்ள காலம். காலத்தையும் தூரத்தையும் வென்று விளங்குகின்றான் மனிதன்! இதுபோன்ற நிலை திருவள்ளுவர் காலத்தில் இல்லை! ஆனாலும், திருவள்ளுவர் ஓருலகமே கண்டார்! பிரிவினையற்ற உல்கமே திருக்குறளின் குறிக்கோள்!

எந்த நாடாக இருந்தால் என்ன? எந்த ஊராக இருந்தால் என்ன? தான் சென்று வாழும் நாட்டையும் ஊரையும் தமது நாடாக - ஊராக ஆக்கிக் கொள்ளும்