பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



257


இயலாது. சென்றகாலத்தைப்பற்றிய அறிவு எதிர்காலத்திற்கு உந்தி செலுத்தக் கூடிய ஊக்கியாக இருக்க வேண்டுமே தவிர அதுவே வாழ்க்கையாக இருந்துவிடக் கூடாது.

இனிய அன்ப, நம்மில் பலர் சென்ற காலத்திலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்று விரைந்து வளரும் உலகத்தை அவர்கள் அறிந்து கொண்டதாகத் தெரியவில்லை. தமிழைப்பற்றி நிறையப் பேசுகிறார்கள். அவ்வளவும் பழையகாலச் சிறப்பு, தமிழுக்குப் புதிய சிறப்பினைச் சேர்க்கும் முயற்சிகள் இம்மியும் இல்லை. தமிழ் இனத்தின் புகழ்பூத்த பழங்கால வாழ்க்கையைத் திறம்பட எழுதிக் காட்டுகின்றனர்; பேசிக்காட்டுகின்றனர். ஆனால் சதுரப்பாட்டுடன் வாழ்ந்து வையகத் தலைமை ஏற்க முன் வருவதில்லை.

இனிய தமிழ்ச் செல்வ! இயற்கை அமைப்பு எதிர்நோக்குடையதாகவே அமைந்திருக்கிறது. மனிதனுடைய உடலுறுப்புகளின் அமைப்பு முழுதும் முன்னோக்கிச் செல்வதாகவேதான் அமைக்கப் பெற்றிருக்கிறது. ஆதலால் நேற்று நடந்தவை நடந்தவையாகி விட்டன. அவற்றில் இனி எந்த மாற்றமும் எவ்வளவு முயன்றாலும் செய்ய முடியாது. அதனால் அவை வாழ்க்கைக்குப் பின்னணியாக அமைய முடியுமே தவிரப் பயன் தருவனவாக அமையமுடியாது. இனிய அன்ப, நம்மில் பலர் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கவே அச்சப்படுகின்றனர். கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் ஏதோ எதிர்காலம் நம்முடைய கையில் இல்லாதது போலச்சொல்லித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். கடவுள் நாம் செய்யும் முயற்சிகளுக்கெல்லாம் துணை நிற்பவரே தவிர அவராக ஒன்றும் செய்து விடுவதில்லை.

இனிய அன்ப, நீ பேருந்துப் பயணம் செய்திருக்கிறாய் அல்லவா? அந்தப் பேருந்தில் வலவர் (டிரைவர்)க்கு முன்னால் ஒரு சிறிய கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதைப்

தி.18.