பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மற்றபடி சோவியத் ஒன்றியம், சீனா, சப்பான் போன்ற நாடுகளில் அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளே பயிற்று மொழி! ஆட்சிமொழி.

"உலகத் தோடொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்"

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு"

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு"

என்ற குறள்கள் நமக்குக் கற்றுத்தரும் பாடம் என்ன? என்பதைச் சிந்தனை செய்து எழுது.

இன்ப அன்பு
அடிகளார்
8. தாய்மொழிவழிக் கல்வி-3

இனிய தமிழ்ச் செல்வ,

திருவள்ளுவரின் கல்வி, "கற்பவை கற்க!” திருவள்ளுவரின் கேள்வி, "நல்லவை கேட்க!” திருவள்ளுவரின் அறிவு "உலகந்தழீஇய ஒட்பம்”. திருவள்ளுவரின் அறிவு ஒழுக்கம் 'உலகத்தோடு ஒட்ட ஒழுகுதல்’ திருவள்ளுவரின் வாழ்நிலை.

"எவ்வது உறைவது உலகம் உலகத்தோ(டு)
அவ்வது உறைவது அறிவு”

நாடு எதுவாயினும் அதுவே திருவள்ளுவரின் நாடு!

"யாதானும் நாடாமால் ஊராமல் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு”

இனிய தமிழ்ச் செல்வ! இந்தத் திருக்குறள்கள் நமது தமிழினத்தின் வாழ்க்கை நெறிகளாக மலர்ந்திருப்பின் இன்று, தென் கிழக்காசிய நாடுகளில் ஒரு தமிழர் கூட்டுக் குடியரசு நிலவும் வாய்ப்பிருந்திருக்கும். அந்த நல்லூழ் நமக்கு இல்லாமப் போய்விட்டது. அதற்கு வரலாறு பிழைசெய்து