பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒருமைப்பாட்டுக்கேற்றதாக நம் அனைவரின் சிந்தனை அமைவதாக! இந்தச் சிந்தனை உயிர்ப்பும் உறுதியும் உடையதாக அமைவதாக! நாம் அனைவரும் இந்தியர்! மனிதர்! உரத்தகுரலில் சொல்வோமாக! நமது நாடு உலகம்; நமது வீடு, நமது நாடு. இந்தப் பண்புகள் நமது அணிகலன்கள் ஆகுக!

இன்ப அன்பு
அடிகளார்
14. இகல்இன்றி இரு

இனிய செந்தமிழ் செல்வ!

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழினத்தின் ஒருபகுதியினரை வகுத்திவந்த துன்பம் ஒருவாறாக மறைந்தது. ஆம் செல்வ! இலங்கைத் தமிழர்களின் துன்பத்தைத்தான் கூறுகின்றோம். வீரகாவியங்கள் செய்த பாரதிதாசனே "கெட்ட போரிடும் உலகம்" என்று போரிடும் உலகத்தினைச் சாடுகின்றான். வழக்கம்போல சமாதானத்தின் காவலனாக உள்ள நமது பாரதநாடு இலங்கையில் சமாதானத்தைத் தோற்றுவித்துள்ளது. இனிய அன்ப! இந்த ஈழத்தமிழர்களில் சிக்கலில் நமது திருக்குறள் பேர்வையின் 19-1-85 பொதுக்குழு எடுத்தமுடிவுகளே இலங்கை இந்திய உடன்பாட்டின் நெறிகளாக அமைந்துள்ளன எனில் அதுவியப்பன்று! திருக்குறளின் சிறப்பு அது.

திருவள்ளுவர் ‘படைச்செருக்கு’ முதலிய அதிகாரங்கள் கூறினாரேனும் ‘இகல்’ என்று ஒர் அதிகாரம் அமைத்து, மாறுபடுதலையும் மாறுபாட்டின் வழி பொருதுதலையும் தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றார். இனிய செல்வ! திருவள்ளுவர் இகல் அதாவது மாறுபாடு கொள்ளுதல் தவறு என்று மட்டும் கூறவில்லை. மாறுபாட்டின் காரணமாக அமையும் பிரிவினை உணர்வை கூடிவாழாமையை நோய் என்றே கூறுகின்றார். கூடி வாழ்தலே மானுடத்தின் இயற்கை