பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



291


அமைதிப்படையினருடன் போர் செய்வதை வரவேற்க இயலாது. வீரம் இருக்கிறது; விவேகம் இல்லை, என்பதே முடிவாகும். இந்த விடுதலைப் புலிகளை நினைத்துத்தான் போலும் திருவள்ளுவர்,

"நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் துரக்கின் உயிர்க்கிறுதி யாகி விடும்”

என்றருளிச் செய்தார். இந்தியா ஒரு வல்லரசு நாடு. இந்தியப் படை வலிமை வாய்ந்த படை. இந்தப் படையை எதிர்த்துப் போராடுவது சாத்தியமல்ல என்பதை விடுதலைப் புலிகள் உணராதது தவக்குறைவே. இனிய செல்வ, இன்று என்ன செய்யவேண்டும்?

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நான நன்னயம் செய்து விடல்"

என்ற குறள் நெறிப்படி உடனடியாக இந்திய அமைதிப்படை போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பைத் தரவேண்டும். இலங்கை அரசும் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு தமிழர்களை இலங்கை குடிமக்களாக ஏற்று அனைத்து அரசியல் உரிமைகளையும் வழங்கி வாழ்வளிக்க வேண்டும். இனிய செல்வ, இவை நடக்க வேண்டும்! நடந்தேயாக வேண்டும்! இதுவே நமது பிரார்த்தனை!

இன்ப அன்பு
அடிகளார்
17. உட்பகை உயர்வு தராது

இனிய செல்வ,

இன்னமும் இலங்கையில் அமைதி கால் கொள்ளவில்லை. இது வருந்தத்தக்கது. என்ன செய்வது? இலங்கைச் சிக்கலில் அடிப்படையும் தெளிவும் இல்லாமல் குழம்பு