பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



293


முறைக்குக் கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுப் போராடுகின்றனர்.

இனிய செல்வ,

'எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்ப திழுக்கு'

‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்’.

என்ற திருக்குறளைப் போராளிகள் சிந்திக்கவேண்டும். இந்திய அரசு போராளிகளுக்குத் தொடக்கக் காலம் முதலே அனுசரணையாக இருந்து வந்திருக்கிறது. நெறியில்லா நெறிகளில்கூட உதவியாக இருந்திருக்கிறது. இந்தியா ஒரு மனிதர் அல்ல; ஒரு நாடு. ஆசியநாடுகளில் வல்லாண்மையுடையதாக விளங்கித் தலைமையேற்கும் நாடு. இந்தியா ஒப்பந்தம் பற்றி முன்பே போராளிகளிடம் விளக்கி, அவர்களின் சம்மதத்துடனேயே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிற வழியிலும் கொஞ்ச தூரம் - அமைச்சரவை அமைக்கும் வரையில் போராளிகள் வந்தனர். அதற்குப்பின் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா சில தவறுகளைச் செய்துவிட்டார் என்று காரணம் காட்டி, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு மாறாக இந்திய அமைதிப்படையுடனேயே போராடத் தொடங்கியதற்கு மாறாக இலங்கை அதிபர் செய்த தவறுகளை இந்திய அரசுக்கு எடுத்துக்காட்டி, தீர்வு காண முயன்றிருக்க வேண்டும். இனிய செல்வ! திருக்குறள்,

"பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு"

என்று கூறுகிறது. இன்றைய ஈழத்துத் தமிழர்கள் இந்தக் குறளுக்குப் பொருத்தமான-ஒரு சமுதாயமாகவா வாழ்கிறார்கள்? அம்மம்ம! ஒரே தமிழினத்தில் இத்தனைக் குழுக்களா? உட்பகை கொண்டு ஒருவரை ஒருவர் கொலை