பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



295


அரசை வற்புறுத்தி இந்த உரிமைகளைப் பெற்றுத் தரும் என்று நம்புகின்றோம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் பெற்றுள்ளதைப் போன்ற உரிமைகளே, இலங்கையில் அமையும் தமிழ் மாகாணங்களுக்கு வேண்டும். இதுவே நமது பாரதப் பிரதமர் நமக்குக் கொடுத்த உறுதி. இந்த வகையில் இந்திய அரசை நாம் அனைவரும் வலியுறுத்த வேண்டும்.

இன்ப அன்பு
அடிகளார்
18. மக்களாட்சியே மாண்புறு ஆட்சி

இனிய செல்வ,

தமிழ் நாட்டின் அரசு கலைக்கப்பட்டு விட்டது. கலைக்கப்பட்டதோடு மட்டுமல்ல. தமிழ் மக்களுக்கு தலை குணிவும் வந்து சேர்ந்துள்ளது. என்ன விழிக்கிறாய்! ஆம்! மிக உயர்ந்த சட்டமன்றத்தில் குப்பத்து நிகழ்ச்சிபோல அடிதடிச்சண்டை! இது வெட்ககரமான செய்தியல்லவா! ஜனநாயகம் - மக்களாட்சி என்றால் என்ன? தெளிவான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள், தெளிந்த உணர்வுடன் முடிவெடுத்தல், எடுத்த முடிவினை அனைவரும் ஏற்று ஒழுகுதல் இவையே ஜனநாயகப் பண்பு சார்ந்த வாழ்க்கை முறை. நாட்டில் மக்களாட்சிமுறை ஏற்பட்டு 38 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களாட்சிமுறையைச் சார்ந்த ஒழுகலாறுகள் நம்முடைய வாழ்க்கையில் கால் கொள்ளவில்லையே! பழைய அநாகரிக முறையே கோலோச்சுகிறதே! என்ன செய்வது! அரசியல், + ஆட்சியியல் ஆகியவை தற்சார்புகளில் சிக்கித்தவிக்கும் வரையில் இந்தநிலை நீடிக்கத் தான் செய்யும். அரசியல், + ஆட்சியியல் ஆகியவற்றில் ஆணவத்தின் பாற்பட்ட தன்முனைப்பு இருக்கும்வரை இந்தநிலை நீடிக்கத்தான் செய்யும்! ஆம்! செல்வ, ‘நான்' பெரிதல்ல! நாடு பெரியது! என்ற விரிந்த - பரந்தமனம் வேண்டாமா?