பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



297


சமன்செய்து சீர்ததூக்கும் கோல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

இந்தத் திருக்குறள் ஒவ்வொருவர் வாழ்க்கைக்குமே பாடமாக அமையவேண்டிய திருக்குறள். கடைகளில் பொருளை வாங்கும் முன்பு, எவரும் தராசைத் துக்கிச் சமநிலை காட்டிய பின்பே எடைக்கல்லையும் பொருளையும் இட்டு நிறுப்பர். அதுபோல் சிறந்த பண்புள்ள மனிதர்கள் மற்றவர் கருத்தைத் தன்முனைப்பும் தற்சார்புமின்றி ஏற்று ஆய்வு செய்வர். இதுவே சமன் செய்யும் பண்பு. இத்தகு பண்புகள் கொள்ளும் குடும்பத்தார் அன்போடு இணைந்து வாழ்வர். எங்கும் ஒருமை நிலவும். காழ்ப்பு இல்லை! கலகமும்-இல்லை! காந்தாரிக்குக் குழந்தைகள் பிறந்தது போல இன்று கட்சிகள் பிறக்கின்றன; இயக்கங்கள் தோன்றுகின்றன! இவற்றால் என்ன பயன்? வெறும் வெளிச்சமே! இனிய செல்வ, மீண்டும் எழுதுவோம்!

இன்ப அன்பு
அடிகளார்
19. தக்காரைத் தேர்வு செய்

இனிய செல்வ!

தமிழகத்தில் நடக்கக் கூடாதது நடந்து விட்டது.

"பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

என்ற நெறியைப் போற்ற வேண்டிய தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் முறைகேடாக நடந்து கொண்டார்கள். சட்டமன்றத்தில் கலகம், அடிதடிச் சண்டை! இந்தச் செய்திகள் தமிழர்க்குத் தலைகுனிவைத் தரத்தக்கன.

இனிய செல்வ, மக்களாட்சி-ஜனநாயகம் என்பது ஒர் உயர்ந்த வாழ்க்கை முறை. தேர்தல்களினால் மட்டும் ஜன நாகரிகம் சிறந்துவிடா. இருவேறு கருத்துக்களைச் சமநிலையில் கேட்டல், ஆய்வு செய்தல், ஏற்பன ஏற்றல், ஏற்புக்