பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


28. தேர்தல் சிந்தனை-1

இனிய செல்வ!

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எண்ணற்ற சலுகைகள் வாரி வீசப் போவதாக வாக்குறுதிகள்-அறிவிப்புகள் கணக்கிலா நிலையில் வந்துகொண்டே இருக்கின்றன. எதிர்கால முதலமைச்சர் பதவி தனக்கே என்று உரிமை கொண்டாடும் ஒருவர் அறிவித்துள்ள சலுகைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு 42,600 கோடி ரூபாய் ஆண்டு ஒன்றுக்குத் தேவை. இது எந்த உலகம்! இவ்வளவு நிதிக்கு எங்குப் போவது? இதைப் பற்றி யார் எண்ணிப் பார்க்கப் போகிறார்கள்? நம்மில் பாதிபேர் ஏழைகள். வழிவழியாகச் சலுகைகளையே நம்பி வாழ்பவர்கள். ஆனால் அறிவிக்கப்படும் இந்தச் சலுகைகள் ஆகாச வாணங்களே தவிர, ஒளி விளக்குகள் அல்ல. எல்லாருமே மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்கவே முயற்சி செய்கின்றனர். மக்களை, மக்களாக வாழ, வழி செய்வதற்கு யாரும் எண்ணுவதாகத் தெரியவில்லை. நெறிமுறையற்ற சலுகைகளும்கூட ஒரு வகையான கையூட்டுக்களேயாம். அதுவும் தேர்தல் காலத்தில் அறிவித்தால் கட்டாயமாகக் கையூட்டாகவே கருத வேண்டும்.

ஒரு குடியாட்சி நாட்டில் வாழும் மக்கள் அனைத்துரிமைகளுக்கும் சொந்தக்காரர்கள். தேர்தல் அறிக்கைகள் காலத்தில் தயார் செய்ய வேண்டும். ஜனவரியில் தேர்தல் வரப்போகிறது. டிசம்பர் பிறந்து விட்டது. இன்னமும் ஒரு கட்சி கூட தேர்தல் அறிக்கைகள் தரவில்லை. தேர்தல் அறிக்கைகள், ஒர் ஐந்தாண்டுத் திட்டம் போலத் தயார் செய்யவேண்டும். ஆக்கவழியிலான நல்லாட்சி அமைப்ப தற்குரிய திட்டங்கள், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புக்கள் உருவாக்குதல், விலைவாசிக் கட்டுப்பாடு, ஆயுட்கால