பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



323


வளர்ச்சி, எல்லாருக்கும் தரமான கல்வி உரிமை முதலியன வழங்கப் பெறுதல் வேண்டும். சுரண்டல் தன்மையுடைய சமுதாய அமைப்பு, பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றினை அறவே நீக்கும் செயல் முடிவுத் திட்டங்கள் அறிவிக்கப் பெறுதல் வேண்டும்.

இத்தன்மையான தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொரு கட்சியும் தயாரித்து, மக்கள் மன்றத்தில் வைத்து, மக்கள் கருத்தறிந்து, இறுதி வடிவம் கொடுத்துப் பின் தேர்தல் காலத்தில் மக்கள் மன்றத்தில் வைத்து வாக்குப் பெறுதலே முறை.

இன்று இந்த நடைமுறையை ஒரு கட்சி கூடப் பின்பற்றவில்லை! எல்லாக் கட்சிகளும் தேர்தல் நிதியை நேரடியாகவும், மறைமுகமாகவும் குவித்துக் கொண்டுள்ளன. இன்றைய நிலையைப் பார்த்தால் தேர்தல் என்ற பெயரில் பணபலப் பரீட்சை நடக்கும்போலத் தெரிகிறது. இது மக்களாட்சி முறையன்று!

இனிய செல்வ, தேர்தலில் உனக்கு வாக்கு இருக்கிறது, நீ கட்டாயம் வாக்களிக்க வேண்டும். மறந்துவிடாதே! வாக்களிப்பதற்குமுன் திருவள்ளுவரை நினைத்துக் கொள். அவர் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையைப் பற்றிக் கூறிய திருக்குறளை ஒரு தரம் நினைத்துக் கொள்க!

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்பது திருக்குறள்.

‘இதனை’ என்று திருக்குறள் எதைச் சுட்டுகிறது? "இதனை” என்பது நாட்டுத் தேவையை! வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், வறுமையை அறவே நீக்குதல், விலையைக் கட்டுப்படுத்தல்; பொருளாதாரத்தில் நாட்டைத் தற்சார்பு நாடாக வளர்த்தல் ஆகிய பணிகளையே "இதனை” என்று குறிப்பிடுகிறார் இந்தப் பணிகளைச் செய்வதை நோக்கமாகக் கொண்ட கட்சி எது? வேட்பாளர் யார்? என்று