பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆய்வுசெய்து கொள். ஒரு நல்ல நோக்கம் மட்டும் இருந்தால் போதாது. அதனை நிறைவேற்றும் திறன், கருவிகள் உடையவராக இருக்கின்றாரா என்றும் ஆய்வு செய்தல் வேண்டும் என்பதனையே ‘இதனால்’ என்ற சொல் குறிக்கிறது.

தமிழ் நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். உழைக்கும் உள்ளமும், கரங்களும் இருந்தும் வேலை கிடைக்கவில்லை. விலை ஏற்றம் என்பது நச்சுப் பாம்பு. நஞ்சேறும் வேகத்தை விட வேகமாக விலை ஏறுகிறது. தமிழ்நாட்டில் தமிழ், கல்வி மொழியாக, பயிற்றுமொழியாகத் துறைதோறும் வளரவில்லை, இவற்றையெல்லாம் செய்து முடிக்கும் குறிக்கோள் எந்தக் கட்சிக்கு இருக்கிறது? திறன் எந்தக்கட்சிக்கு இருக்கிறது? என்று எண்ணுக! ஒருதடவைக்கு மூன்று தடவை எண்ணுக! சென்றகால வரலாற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்க! ‘இதனை இதனால் இவர் முடிப்பார்’ என்று எண்ணித்துணிக! வாக்களித்திடுக! நல்லாட்சி அமைத்திடுக! இதுவே திருக்குறள், வாக்காளர்களுக்குக் கூறும் அறிவுரை!

இன்ப் அன்பு
அடிகளார்
29. தேர்தல் சிந்தனை-2

இனிய செல்வ,

இப்பொழுது உனக்கு எதிர்பாராமல் கிடைத்திருக்கும் மதிப்பில் மூழ்கிக் களித்துக் கொண்டிருப்பாய்! உன்னுடைய நன்மைக்காக அள்ளி வழங்கப்பெறும் உறுதிமொழிகளில் திளைத்துக் கனவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பாய்! உனது கனவை விட்டுச் சற்றே நனவுலகத்திற்கு வருக!

ஆம்! இது தேர்தல் காலம்! வேட்பாளர்கள் கும்பிட்ட கையை இறக்காமல் உலாவரும் காலம்! கட்சிகள்-கட்சிகளின் தலைவர்கள் உறுதிமொழிகளைத் தாராளமாக