பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தடைப்படாமல் இருந்திருந்தால் இந்த நூற்றாண்டில் அது ஒரு பன்முக இயக்கமாக வளர்ந்து அரிய பணிகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். வழிவழியாகத் தமிழினத்திற்கு கேடுசெய்யும் அயலினத்தின் சூழ்ச்சியாலும் நம்மவரின் துரோகத்தாலும் நெருக்கடிகால அரசு பேரவை இயக்கத்தை முடக்கியது.

இனிய செல்வ, திருநாளைப் போவார் திருவவதாரம் செய்த சிற்றூராகிய, மேலாதனுார் மேம்பாட்டுப்பணியும் கலைஞர் ஆட்சியில் தான் தொடங்கியது. இடையில் அந்தப் பணியிலும் தொய்வு. நடக்கவில்லை! இந்த பணியும் சிறப்பாக நடைபெற வேண்டும். கலைஞர் ஆட்சியில் தொடங்கப் பெற்றவை கலைஞர் ஆட்சியிலேயே நிறைவு பெற வேண்டும் என்ற நியதி இருக்கிறது போலும். நாம் என்ன செய்ய இயலும்?

இனிய செல்வ, நெருக்கடி கால அரசு நம்முடைய வாழ்க்கையில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியது. அதனால் பொது வாழ்விலிருந்தும் மெள்ள மெள்ள ஒதுங்கிக் கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டோம். அறிவியல் தமிழ் வளர்ச்சிப்பணியிலும் ஈடுபட்டோம். கலைஞர் அறிமுகப்படுத்திய பணியிலிருந்து விலக வில்லை. ஆயினும் தமிழ் நாட்டில் கலைஞரோடு திருமண மேடைகளைத் தவிர வேறு மேடைகளில் கலந்து கொள்ளவில்லை. அந்த வாய்ப்பை ஒரு தடவை கலைஞரின் ஆர்வலர்கள் வழங்கினார்கள். அதாவது கலைஞரின் சட்டசபைப் பணி வெள்ளிவிழாக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார்கள்! இசைவும் தந்திருந்தோம்! அந்த நேரம் தென்குமரியில் மண்டைக் காட்டில் பற்றி எரிந்த சமய சமுதாயக் கலவரச் சமாதானப் பணியில் ஈடுபட்டிருந்த காலம்! அந்தப் பணிகளின் சுமையாலும் எதிர்பாராமல் ஏற்பட்ட பெரிய இடத்து விபத்துக்களாலும் கலந்து கொள்ள இயலாமற் போய்விட்டது. அதனைக் கலைஞருடைய ஆர்வலர்கள் தவறாகப் புரிந்து கொண்டனர்; சொன்னார்கள். அதாவது