பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



331


அன்றைய முதல்வர் தடுத்து விட்டார் என்றும், அவருடைய நட்பைக் கருதி வரவில்லை என்றும் கூறினார்கள்! இது உண்மையல்ல. உண்மையிலேயே பணிச்சுமைதான் காரணம்! ஆயினும் மரபுப்படி நமது வாழ்த்துக்களையும் பரிசினை அனுப்பிவைத்திருந்தோம்! அது பற்றி கலைஞர் என்ன நினைத்தார்! அது நமக்குத் தெரியாது! இந்த இடைக்காலத்தில் கலைஞர் தொடர்புக்காக மேவிச்செல்லாத நிலை உண்டு! ஆனால் வேண்டாம் என்று எண்ணியதில்லை; விலகியதில்லை! ஆட்சியாளர்களுக்காக நாம் கலைஞரைப் பிரிந்ததும் இல்லை; பிரியப் போவதும் இல்லை! ஆண்டு தவறாமல் கலைஞர் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை அனுப்பிவைத்துள்ளோம். நமது இதழில் கலைஞர் அவர்கள் படத்தை அட்டைப் படமாகப் போட்டுப் பாராட்டி எழுதியிருக்கிறோம்.

இனிய செல்வ, திராவிட முன்னேற்றக் கழகம் படித்த புத்திசாலித்தனம் நிறைந்தவர்களைக் கொண்ட உயிர்த்துடிப்புள்ள இயக்கம். எல்லாவற்றையும் விட அந்த இயக்கத்தினிடத்தில் நிலவும் நட்புணர்வு வியக்கத்தக்கது; மகிழத் தக்கது. மதுரையில் உலகத் தமிழ்மாநாடு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த காலம். திருப்புத்தூரில் திருமுருகன் பேரவையில் நமது பேச்சு! நமக்கு ஒரு பழக்கம், எந்த மேடை, எந்த அமைப்பாக இருந்தாலும் சமுதாய நலந்தழுவியதாகவே பேசுவது. அந்த உலகத் தமிழ் மாநாட்டில் கலைஞர் கலந்து கொள்ளாதது பற்றிய விவாதம் நடந்து கொண்டிருந்த நேரம்! நமது திருப்புத்தூர்ப் பேச்சில் தமிழினத்தின் ஒருமையின்மையைப் பற்றி, .

"குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்"

என்ற திருக்குறளை அடிப்படையாக வைத்துப் பேசினோம். அப்போது உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடக்கிறது. நமது மொழிமாநாடு இதில் எல்லோரும் பங்கேற்க வேண்டும்