பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



333


"எல்லைக்கண் நின்றார் துறவார் தொலை விடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு"

(806)

ஆலோசனைக் குழுவில் பொறுப்பையும் கொடுத்துள்ளார். நாம் பல ஆண்டுகள் எழுதியும் பேசியும் வந்த செய்திகளுக்கு ஒரு செயலுருவம் கொடுக்கக் கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளார். அன்று நாம் மகிழ்ந்து அனுபவித்தது கலைஞர் அவர்களின் தலைநாள் விருப்பம்.

இன்ப அன்பு
அடிகளார்
32. எல்லார்க்கும் எல்லாம்

இனிய செல்வ,

தமிழ்நாடு அரசின் நிதிநிலைத் திட்டத்தை, பாராட்டுதலுக்குரிய முதல்வர் கலைஞர் அளித்துள்ளார். பொதுவாக இன்றுள்ள சூழ்நிலையில் இதை விடச் சிற்ப்பாக நிதிநிலைத் திட்டம் தயாரிக்க இயலாது. ஆதலால், கலைஞர் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்!

கலைஞர் இயல்பாகவே மனிதநேயம் உடையவர். ஆதலால் நிதிநிலைத் திட்டத்தில் நலிந்தோருக்கு நலம் பயக்கும் திட்டங்கள் பல அறிவிக்கப் பெற்றுள்ளன. இந்த அம்சங்கள் மனநிறைவைத் தரத்தக்கன. ஆயினும்-இனிய செல்வ, ‘ஆயினும்’ என்ற சொல் உனக்கு அதிர்ச்சியைத் தருகிறதா? அதிர்ச்சி வேண்டாம்! நிதிநிலைத் திட்டத்தில் குறை காண்பது நமது குறிக்கோளன்று! ஒரு அரசு தயாரிக்கும் நிதிநிலைத் திட்டம் எப்படி அமையவேண்டும் என்று திருக்குறள் வழிகாட்டுகிறது? அந்த வழியில் மேலும் கலைஞர் அரசு நடைபோடவேண்டும் என்ற ஆர்வத்தால் சில பரிந்துரைகள்! ஆம், பரிந்துரைகளே! அதுவும் நமது பரிந்துரைகள் பரிந்துரைகள் அல்ல! திருவள்ளுவரின் பரிந்துரைகள்!