பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


35. பதவிக்கு அழகு பகைத்திறம் அறிதல்

இனிய செல்வ,

மானுட வாழ்க்கைக்குப் பகை ஆகாது. அதனாலன்றோ, நமது திருக்குறள் "பகையென்னும் பண்பிலதனை" என்று கூறுகிறது. கம்பனும் "யாரோடும் பகை கொள்ளலன்" என்றான். இராமனுக்குக் கூட இராவணன் மீது பகை இல்லை. பகை இருந்திருந்தால் மூர்க்கத்தனமான போரே நடந்திருக்கும். தூது அனுப்பியிருக்கமாட்டான். “இன்று போய் நாளை வா" என்று சொல்லும் நிலை தோன்றியிருக்கிறது. பகை தீது, பகை கொடிது. ஆனால், பகையைக் கண்டு வாளா அஞ்சினால் பகை மாளாது. ஏன் பகை கூடாது என்பதனைக் காரண காரியத்துடன் ஆராய்ந்து அறிந்து பகையை விளக்கினாலேயே உண்மையாக-முற்றாகப் பகைமை அகலும். தமக்குத் துன்பம் வருமே என்ற அச்சத்தின் காரணமாக மட்டும் பகையை வெறுத்தல் கூடாது. மானுடத்தின் அகநிலை வாழ்க்கையும் சரி, புறநிலை வாழ்க்கையும் சரி பாதிக்கும்.

இனிய செல்வ, ஈழத்துத் தமிழர் சிக்கல்கள், நமது நாட்டைப் பொருத்தவரையில்,

"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்"

என்றாயிற்று. ஆனால், இன்றைய இந்திய தமிழக-இலங்கைச் சமூக இயலில் தவிர்க்க இயலாதது என்பதையும் நினைவிற்கொள்க. தவிர்க்க இயலாத-முடியாத தீமை நம்பாலதாயிற்று. நாமும் விடுதலைப் புலிகளைத் தேர்ந்து தெளிந்து ஏற்றுக் கொள்ளவில்லை; ஆதரிக்கவில்லை. அவர்களுடைய விருப்பம் என்ன? வேனவா என்ன? என்று தெரியாமலேயே தற்செயலாக அல்லது உணர்ச்சிவசப்பட்ட நிலையில்