பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



343


சரியான செயல் திட்டத்துடன் உறவுகள் கால் கொள்ளவில்லை; இலங்கையில் சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கித் தவித்த விடுதலைப் புலிகள் இந்தியாவை, சர்வதேச விதிமுறைகளை மீறிச் சரணடைந்தனர். தமிழ் நாட்டு மக்கள் இனவழிப் பரிவு காட்டினர். ஆதலால் தன்னிச்சையாக நடந்தது போலாகி விட்டது.

இனிய செல்வ, தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்த பல்குழு மனப்பான்மை, ஈழத்துத் தமிழர் சிக்கல் ஒருதலையாகக் கேட்க - ஆய்வு செய்ய இயலாமல் தடுத்துவிட்டது. ஈழத்துத் தமிழர்கள் இருவேறு-பல்வேறு குழுக்களாகவே இந்தியத் தமிழ்நாட்டில் புகுந்தனர்; நடமாடினர்; அரசியல் ஆதாயம் தேடினர். இந்த அணிகளில் விடுதலைப்புலிகள், தமிழ்நாட்டின் அன்றைய ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்று விட்டதால், நடுவணரசின் ஆதரவையும் பெற்றது. திரு.சபாரத்தினம் தலைமையில் இயங்கிய எடலோ இயக்கம் அன்றைய எதிர்கட்சியின் திமுகவின் ஆதரவையும் பெற்றிருந்தது. அதனால் நடுவணரசு செவிசாய்க்கவில்லை. திடீரென ஒரு நாளில் விடுதலைப் புலிகளால் சபாரத்தினமும் அவரைச் சார்ந்தவர்கள் 300 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையால் நமது முதல்வர் கலைஞர் ஆற்றொனாத் துயரம் எய்தினார் இனிய செல்வ, இந்த வரலாற்றுப் போக்கில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் காலத்தின் கட்டாயமாக ஏற்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் சரியா? தவறா? என்று ஆராய்ந்து அறிய யாதொரு கட்சியும் முன்வரவில்லை. ஆனாலும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை ஈழத்துத் தமிழர்களின் அனைத்து அமைப்புகளும் வரவேற்றன. விடுதலைப் புலிகளும் கூடத் தொடக்கத்தில் தயக்கத்துடன் வரவேற்றனர். ஆனால், அது நடிப்பே என்று பின் தெரிய வந்தது. ஆயுதங்களை ஒப்படைப்பதுபோல ஒத்திகை நடத்தினார்கள். ஆனால், காலப் போக்கில் அவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரிக்காதது மட்டுமன்றி,