பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



353


திராவிடர்கள் சாதித் தலைவரை நாடுகிறார்கள்! அவர் வந்தார்! அமைதிக்குப் பதில் கலவரத்தைத் தூண்டிவிடத் தக்கவகையில் பேசிவிட்டார்! பிடித்துக் கொண்டது கலவரத் தீ!

எந்தச் சமுதாயத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க இயலும்; முடியும்! அருமையுடையது என்று ஒன்று இல்லை; காலமறிந்து கடமைகளைச் செய்யின்! என்பது வள்ளுவம்.

"அருவினை யென்ப உளவோ கருவியால்
கால மறிந்து செயின்"

(483)

காலமறிந்து செய்யவேண்டும். உரிய கருவிகளைப் பயன்படுத்திச் செய்யவேண்டும். மதுரை மாவட்டக் கலவரத்திற்கு மிகுதியும் காரணம் ஒன்று காலந்தாழ்த்தியது; இரண்டு கருவிகள் முரண்பட்ட நிலையில் இயங்கியது. அதாவது கருவிகள் கலவரத்தை அடக்கி அமைதிப்படுத்தும் மனித சமூகம் எடுத்துக்கொள்ளாமல், கலவரத்தை வளர்ப்பவர்கள் கையில் சிக்கிக்கொண்டன! இதனால் வள்ளுவம் ஒரு நடை முறை வாழ்வியல் என்பது புலனாகிறது. இனிமேலாவது திருக்குறளை அரசு அலுவலர்கள் கற்றறிவார்களா?

இன்ப அன்பு
அடிகளார்
39. வாக்காளர் கடமை

இனிய செல்வ,

நமது நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் களத்தில் இறங்கிவிட்டனர்; இங்கும் அங்கும் சுறுசுறுப்பாக நடமாடுகின்றனர்! ஆரவாரமான காட்சிகள்! வெடி தெறிக்கும் பேச்சுகள்! தேர்தல் குடு பிடித்து விட்டது! ஆனால், வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தான் சூடு பிடித்திருக்கிறது! ஐயோ, பாவம்! இனிய செல்வ, தேர்தலில் தீர்ப்பு வழங்க வேண்டிய வாக்காளர்கள் இன்னும் சுறு

தி.24.