பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

364

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெருந்தலைவர் காமராசரின் கொள்கை, கோட்பாடுகளுக்கு வெற்றி பெற்றுத் தருவதன் மூலம் நினைப்பதா? என்று நினைத்துப் பாருங்கள்; மக்கள் தலைவராக விளங்கிய காமராசர் மக்களுக்கு நன்மை கிடைக்கும் பொழுதெல்லாம் மகிழ்வார். காமராசரின் நினைவு பஞ்சாயத்து சபைகளின் ஊராட்சி மன்றங்களின் வெற்றியில் தான் அமைந்திருந்தது. இனிய செல்வ, தலைவர்கள் பெயரால் நினைத்த போக்கிலெல்லாம் நினைவு கூரச் சிலைகள் அமைத்தல், பெயர்கள் சூட்டுவது ஆகியன நல்ல மரபல்ல. இனிய செல்வ, நமது காங்கிரஸ் நண்பர்கள் எண்ணிப் பார்த்து மறைமலையடிகள் பெயரை ஏற்பது பெருமை தரும். மக்களின் தலைவர் காமராசருக்குப் பெருமை சேர்க்கும் மாநாட்டில் தீர்மானம் போட்டதுடன் சரி! பிரதமர் அறிவித்ததோடு சரி! அந்தப் பெயரை அரசின் ஆணைவழி முறைப்படுத்திக் கொள்ளவும் இல்லை. ஏன் இந்த மெத்தனம்? மறைமலை நகரில் உள்ள இரயில் நிலையத்தின் பெயரைக் காமராசர் பெயரால் வைக்க, மாநில அரசை இசைவு கேட்டால் மாநில அரசு மறைமலை நகர் இரயில் நிலையம் என்றுதான் பெயர் சூட்டும்! இதில் என்ன கேள்வி இருக்கிறது? இனிய செல்வ, தொடர்ந்து எழுதுகின்றோம்.

இன்ப அன்பு
அடிகளார்
44. அரசின் கடமை

இனிய செல்வ,

புதிய அரசின் நிதிநிலைத் திட்டம் வந்து விட்டது. எதிர் பார்த்தபடி இல்லை. கிராமப்புற ஏழ்மை நீங்க, வேலையில்லாத் திண்டாட்டம் நீங்க உருப்படியாக ஒன்றும் இல்லை! மாநில அரசின் நிதிநிலைத் திட்டமும் வந்து விட்டது. இதில் ‘கருணை’ அதிகம் இருக்கிறது! நெடிய பார்வையும் இருந்திருந்தால் முழு வரவேற்பு அளிக்கலாம். இன்று மோசமாக இருந்துவரும் எதிர்காலத் தலைமுறையைப்