பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாட்டில் நடமாடுவதால் யாது பயன்? இந்தப் போக்கில் திருப்பெருந்துறை நினைவிற்கு வருகிறது.

"நாடகத் தால் உன்னடியார் போல்
நடித்து நான் நடுவே, வீடகத்தே புகுந்
திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்'

என்னும் திருவாசகம் நினைவிற்கு வருகிறது. என்ன விரைவு? பொய்ம்மை கண்டு கொள்ளப்படாது என்பதால் விரைவு! எப்படி விரைந்தால் என்ன? புகுந்தால் என்ன? திருவள்ளுவர் கண்டு காட்டிய செருக்கும் மெய்கண்ட சிவம் உணர்த்திய ஆணவமும் நகைக்கும்; நகைத்து எள்ளல் செய்யும்; இனிய செல்வ கவனமாகப் படி! இயலுமானால் எழுதுக:

இன்ப அன்பு
அடிகளார்
48. வாழ்க, வருவாய்க்குத் தக

இனிய செல்வ,

இந்தியாவின் இன்றைய கடன் பல்லாயிரம் கோடிக்கும் மேலாக இருக்கிறது. அந்நிய நாட்டுச் செலாவணி இருப்பு குறைந்துவிட்டது! ஆம்! இந்தியா ஏழை நாடாக, கடன்கார நாடாக ஆகிக்கொண்டிருக்கிறது! நமது நாட்டு மக்களில் 58.9 விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். ஆற்றல் மிக்க இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்! வேலை பார்ப்போரிலும் பாதிப்பேர் போதிய ஊதியமின்றி முறையாக வாழமுடியாமல் அல்லற்படுகின்றனர்! இஃது இன்றைய பாரதத்தின் நிலை.

இனிய செல்வ, இந்த இடர்ப்பாடான நிலையைச் சமாளிக்க முயலுகிறார் பாரதப் பிரதமர்! பிரதமர் அந்நிய நாட்டு முதலாளிகளை பாரதத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்கும்படி கெஞ்சுகிறார்! நடை பாவாடை விரிக்கிறார்! நாட்டின் அரசியற் கட்சிகள் அனைத்தும் இதனை எதிர்க்கின்றன. பாரதப் பிரதமர் சொல்லும் ஒரே