பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



379


மோசம்! கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளுக்குப் போதிய ஆசிரியர்கள் நியமிப்பதில்லை! போதிய கட்டிட வசதியில்லை. கற்பிக்கும் கருவிகள் இல்லை! பரிதாபகரமான நிலை! இத்தகைய கல்வி நிலையை வைத்துக் கொண்டு உயர்சாதிக்கு ஒப்ப நகர்ப்புறவாசிகளுக்கு இணையாக வளர வேண்டுமென்றால் முடியுமா? ஒருக்காலும் முடியாது. ஆளும் அரசுகளுக்குத் தாழ்த்தப்பட்டவர்களிடத்தில் பின்தங்கியவர்களிடத்தில் பரிவும் அக்கறையும் இருக்குமானால் கிராமப்புறக் கல்வியின் தரத்தைக் கூட்டவேண்டும். இனிய செல்வ, அடுத்து உயர் சாதியினர் என்று கூறப்படுவோர் மட்டுமே முன்னேறியவர்களா? தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சேர்ந்தவர்கள் முன்னேறியவர்களாக இல்லையா? வசதியும் வாய்ப்புமுடையோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் என்று ஒதுக்கீடு செய்தால் இச்சாதிகளில் உள்ள முன்னேற்ற நிலையை அடைந்தவர்கள் ஒதுக்கீட்டின் பலன்களை அடைவர். இந்த, தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரில் கடைகோடி மனிதனுக்குச் சென்றடையாது. தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கிய ஒதுக்கியச் சலுகை அந்தச்சாதியைச் சேர்ந்த 20 விழுக்காடு மக்களுக்குள்ளேதான் சுழன்றுக் கொண்டிருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக மற்ற தாழ்த்தப்பட்ட குடும்பங்களைப் பொருத்த வரையில் இன்றுவரை எட்டாத கனி தான், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்துக்கென்று ஒதுக்கிய ஆண்டுகள் 15 ஆண்டுகள்! ஆனால் மூன்று 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தாழ்த்தப்பட்ட சாதியினர் இன்னமும் முன்னேறவில்லை என்பதே உண்மை. அதே போழ்து மற்ற சாதியினர் முன்னேறிய சாதிப்பட்டியலில் உள்ளவர்கள்! ஏன் மற்ற சாதிகளில் கூட அழுக்காறு வளரத் தொடங்கிவிட்டது? தாழ்த்தப்பட்டவர்களிடத்திலும் சலுகை இன்றி முன்னேற முடியாது என்ற இயலாமைக் குணம் தலை காட்டுவதை