பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

382

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



இனிய செல்வ, பொதுவாகச் சாதி முறையில் ஒதுக்கீடு உள்ள வரையில் சாதிகள் நிலைப்பாடு கொள்ளும்; சாதிச் சண்டைகளும் ஓயா, நமது நாட்டு இளைஞர்கள் தன்னம்பிக்கையையும் திறமையையும் வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். சாதிகளை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அந்தந்தச்சாதிகளின் குடும்ப அடிப்படையில் மேம்பாட்டுக்குரிய பணி ஒதுக்கீடுகளைக் கால எல்லைக்குட்பட்டுச் செயற்படுத்த வேண்டும்.

"நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை"

(469)

என்ற திருக்குறள்படி நாம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, மிகவும் பின்தங்கியவர்களுக்கு நன்மை என்று நினைத்துச் செய்வது பின் அவர்களுக்குத் துன்பமாகவும் நாட்டுக்கு நீங்கா இடர்ப்பாடாகவும் தோன்றும். சிந்தனை செய்வார்களா?

இன்ப அன்பு
அடிகளார்
50. வேற்றுமையில் ஒற்றுமை

இனிய செல்வ,

'சரித்திரம் திரும்பி வருகிறது’ என்பார்கள்! உனக்கு எப்போதுமே சரித்திரம் திரும்பி வருவது பிடிப்பதில்லை. அதுவும் நம்முடைய நாட்டுச் சரித்திரம் பின் தொடரக்கூடாது. ஏன்? நம்முடைய நாட்டுச் சரித்திரத்தில் பெருமைப்படத்தக்க நிகழ்ச்சிகள் பல உண்டு என்பது உண்மையேயாயினும் அதில் பல சந்தர்ப்பங்களில் உயிர்ப்பு இருந்த தில்லை; பரவலாக நாட்டு மக்களிடையே விழிப்பு இருந்ததில்லை. பல தலைமுறைகளுக்கு ஒர் அறிஞன் தோன்றுவான்; ஒரு மேதை தோன்றுவான்; அத்திபூத்தாற்போல ஒரு சில அரசியல் தலைவர்கள் தோன்றுவார்கள். இனிய செல்வ, நமது நாட்டில் மிகப்பழங்காலமே சிறப்புடையது. வரவரக்