பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



383


கெட்டும் போய்விட்டது! இல்லை. நாட்டை நாம் கெடுத்துவிட்டோம்!

இனிய செல்வ, ஆம்! நிலப்பிரபுத்துவம் தோன்றியது. ஜமீன்தாரிமுறை நாட்டில் தோன்றியது; பண்ணையடிமை முறை தோன்றியது; மதங்கள் தோன்றின; சாதிமுறைகள் தோன்றின; மூடத்தனங்கள் முளை விட்டன; புரோகிதர்கள் தோன்றினர்! இந்தத் தீமைகளை ஊக்கமளித்து வளர்த்த அரசுகள் தொடக்கத்தில் அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொண்டன. காலப்போக்கில் நமது நாட்டு அரசர்கள் ஊக்கமளித்து வளர்த்த சக்திகளே அரசர்களை அழித்தன. இனிய செல்வ, அந்நிய ஆட்சிகள் வந்தன! அந்திய ஆட்சிகளும் இந்தியர்களுக்குள் பிரிவினைகளை வளர்த்தே தம் ஆட்சியை நிலைப்படுத்தின. ஆயினும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகள் வரலாற்றுப் போக்கில் படுதோல்வி அடைந்தன.

அண்ணல் காந்தியடிகள் நமது நாட்டின் பொது வாழ்க்கையில் கால் எடுத்து வைத்தார்; குறுகிய புத்திகளால் கூன் விழுந்து கிடந்த இந்திய சமூகத்தை உற்று நோக்கினார்! கூனை நிமிர்த்தார்! சாதிகளை மறந்தோம் மதங்களும் தத்தம் செல்வாக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டன. இனிய செல்வ, எல்லாரும் "இந்திய”ரானோம்! நாடு விடுதலை பெற்றது. இனிய செல்வ, நாடு விடுதலை பெற்றதும் மக்களாட்சி தோன்றியது! மக்களாட்சி தோன்றிய பிறகு நமது வரவாறு பழைய நிலைக்குப் போகிறது! இனிய செல்வ. இது நல்லதா? பழைய வரலாறு திரும்புகிறது! அன்று மன்னர்கள் செய்தார்கள்! இன்று ஆள்வோரே செய்கின்றனர்! இன்றும் சாதிகள் வளர்க்கப்படுகின்றன! வர்க்கப்போருக்குப் பதில் சாதீயச் சண்டை நடக்கின்றன! ஏன்? மக்களிடையே மீண்டும் சாதீய மனோநிலைகளைத் தோற்றுவித்து அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர். அரசை, அதிகாரத்தைப் பாதுகாக்கும் உத்தியாக மேற்கொண்டுள்ளனர். இன்று அரசியல் பிரச்சனையே பூதாகரமாகக் காட்டப்படுகிறது. மனித உறவுகளைப் பற்றிச் சிந்திக்கத்