பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோடி ரூபாய் வருவாய் வர, கிராமப்புற ஏழை மக்கள் 5000 கோடி ரூபாய்க்குக் குடித்தாக வேண்டும். இவ்வளவுக்கு அவனிடம் பணம் ஏது? கிராமப்புறத்தான் ஏற்கெனவே ஏழை! வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றான். நியாய விலைக் கடையில் அரிசிக்குக் கூடை தாங்கிக் கால்கடுக்கத் தவம் செய்கிறான். அவனிடம் ஏது காசு! கிராமப்புறத்துக் குடிமக்களுக்குக் குடியை அறிமுகப்படுத்துவது கொடிய முதலாளித்துவத்தின் செயல் என்று லெனின் கூறினார். இவையெல்லாம் கலைஞருக்குத் தெரியாததா? அப்புறம் ஏன் செய்தார்? அதுதான் புரியவில்லை! இனிய செல்வ, நமக்கொன்று புரிகிறது. தெளிவாகப் புரிகிறது. கலைஞர் இனந்தெரியாத அறச்சங்கடத்தில் இருக்கிறார். ஆதலால், விரைவில் மீண்டும் மதுவிலக்கை கலைஞர் அறிமுகப்படுத்துவார் என்றே நம்புகின்றோம். இனிய செல்வ, ஏன் முன்பு 1972இல் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டபோது நாம் மேலவை உறுப்பினர். நாம் அரசுக்குச் சாதகமாக வாக்களிக்கவில்லை. சும்மா இருப்பார்களா? கலைஞரிடம் நமது நிலை தி.மு.க. அரசுக்கு எதிரான நிலை என்று கூறியுள்ளனர். எப்போதும் நம்பால் பழமை பாராட்டும் கலைஞர் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொள்ளாதது மட்டுமல்ல, நமது நிலையை அவர் புரிந்து கொண்டு வாதாடி யிருக்கிறார். அப்போது கலைஞர்,

"களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தா னைத் தீத்துரீஇ யற்று

(929)

என்ற குறளை எடுத்துக்காட்டாகக் கூறினார். நீருக்குள் அமிழ்ந்தவன் உயிர் பிழைத்தல் அரிது. மதுப்பழக்கத்தில் மூழ்கியவன் உய்தல் என்பது இல்லை. இந்தக் கருத்துப் பொதிந்த குறளை நமக்கு எடுத்துக்காட்டியவர் கலைஞர் தான்! ஆதலால் கலைஞர் விரைவில் பூரண மதுவிலக்கை மீண்டும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. இனிய செல்வ, அதேபோழ்து நமக்கும்